சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “பாடசாலைகளுக்கான விளையாட்டு மெத்தை” வழங்கப்பட்ட நிகழ்வு.. (படங்கள் & வீடியோ)
இம்மாதத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம் முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டதும், புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டதும், நீங்கள் அறிந்ததே.
இதனையடுத்து நேற்றையதினம் திங்கள்கிழமை (31.08.2020) காலை ஒன்பது மணிக்கு “புங்குடுதீவு கண்ணகைபுரம் மணற்காடு” மயானம் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்றையதினம் புங்குடுதீவு அனைத்துப் பாடசாலைகளுக்குமான “உயரம் பாய்தலுக்கான பயிற்சியை மேற்கொள்வதுக்குரிய மெத்தை” வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருமான திரு.இ.இளங்கோவன் அவர்கள் விருந்தினராகக் கலந்து கொள்ள, புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதவானுமான திரு.எஸ்.கே சண்முகலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
இவர்களுடன் திரு.கே.விநோதன் (அதிபர் -புங்குடுதீவு மகா வித்தியாலயம்), திரு.சி.கமலவேந்தன் (அதிபர் -புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்), திருமதி.வனிதா அருட்செல்வன் (அதிபர் -புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம்), திரு.ஹென்றி றீகன் (அதிபர் -புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயம்), திரு.எஸ்.கருணாகரன் (முன்னாள் தலைவர் புங். பலநோக்கு கூட்டுறவு சங்கம்) திரு.க.நாவலன் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்), திரு.க.வசந்தகுமார் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்), திரு.பிள்ளைநாயகம் சதீஷ் (சமூக ஆர்வலர்), உட்பட பலரும் ஆரம்ப இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
புங்குடுதீவில் உள்ள அனைத்துப் பாடசாலை மாணவ,மாணவிகளும் விளையாட்டுப் போட்டி, விளையாட்டுப் பயிற்சி போன்றவற்றுக்கு பயன்படுத்தும் வகையில் “உயரம் பாய்தலுக்கான பயிற்சி மெத்தை” ஒன்றை வாங்கித் தருமாறு புங்குடுதீவு கல்விச்சமூகத்தின் வேண்டுகோளை திரு.பி.சதீஷ் அவர்கள், அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களின் கையெழுத்துடன் கடந்தவருடமே “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்திடம்” கோரிக்கையாக முன்வைத்ததை, நிர்வாகசபை ஏற்றுக் கொண்டு, இன்றையதினம் புங்குடுதீவு அனைத்துப் பாடசாலைகளுக்குமான “உயரம் பாய்தலுக்கான பயிற்சியை மேற்கொள்வதுக்குரிய மெத்தை” வழங்கி வைக்கப்பட்டது. இதனை பொதுவாக ஒருஇடத்தில் வைத்து அனைத்துப் பாடசாலைகளும், தேவையின் நிமித்தம் பாவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்ட்து.
எமது “ஊர் நோக்கிய” புனரமைப்பு வேலைகளை தொடர்ந்து மேற்கொள்ள, சுவிஸ் வாழ் அனைத்து புங்குடுதீவு மக்களையும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். (இதுவரை 2019, 2020 வருட சந்தா செலுத்தாதோர், உடன் அதனை செலுத்தி இணைந்து செயல்படுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி)
“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”
இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
01.09.2020
Average Rating