சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மணற்காடு மயானப் புனரமைப்பு” வேலைகள் ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ)
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மணற்காடு மயானப் புனரமைப்பு” வேலைகள் ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ)
இம்மாதத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம் முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டதும், புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டதும், நீங்கள் அறிந்ததே.
இதனையடுத்து இன்றையதினம் திங்கள்கிழமை (31.08.2020) காலை ஒன்பது மணிக்கு “புங்குடுதீவு கண்ணகைபுரம் மணற்காடு” மயானம் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகி உள்ளது. இன்றையதினம் மேற்படி நிகழ்வில் புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருமான திரு.இ.இளங்கோவன் அவர்கள் விருந்தினராகக் கலந்து கொள்ள, புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும் சமாதான நீதவானுமான திரு.எஸ்.கே சண்முகலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
இவர்களுடன் திரு.எஸ்.கருணாகரன் (முன்னாள் தலைவர் புங். பலநோக்கு கூட்டுறவு சங்கம்) திரு.க.நாவலன் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்), திரு.க.வசந்தகுமார் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்), திரு.பிள்ளைநாயகம் சதீஷ் (சமூக ஆர்வலர்), மணற்காடு இந்துமயான அபிவிருத்தி சபை தலைவர் திரு.சு.கருணாகரன், செயலாளர் திரு.M.செல்வரெத்தினம், பொருளாளர் திரு.ஜெயபாலன் உட்பட பலரும் ஆரம்ப இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி பழுதடைந்த நிலையில் இருந்த, புங்குடுதீவு கண்ணகைபுரம் “மணற்காடு” மயானத்தில் எரிகொட்டகைகள் அமைத்தல், அதாவது ஏற்கனவே இருந்து அழிந்து போயுள்ள இரண்டு எரிகொட்டகைகளையும் புதிதாக கேடர் மாற்றி, அதுக்குரிய கூரை யாவும் புதிய தகரங்கள் மூலம் போடப்பட உள்ளதுடன் அவ்விடத்தில் கிரியைகள் செய்வதுக்கான கிணறு மூடப்பட்டு உள்ளததினால், புதிதாக கிணறு உருவாக்கப்பட்டு கிணறு அமைத்தல், அதுக்குரிய சுற்றுத்தளம் அமைத்தல் போன்றவை நடைபெற உள்ளதுடன், ஏற்கனவே இருந்த இரண்டு மண்டபங்களும் புனரமைப்பு போன்ற வேலைகள் அதாவது கிரியை மண்டபத்தின் அத்திவாரம் பூசப்பட்டு, மேலே கூரைகள் மாற்றப்படுவதுடன், மேலே கூரைக்கு வர்ணம் பூசப்பட்டு, மண்டபமும் முழுமையாக பூசப்பட்டு வர்ணம் பூசப்படுவதுடன், அம்மயானத்தின் பற்றையாகவும், மேடுபள்ளமாகவும் சீரற்ற முறையில் இருந்த சுற்றுப் பகுதிகள் யாவும் இயந்திரங்கள் மூலம் சீராக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்பட உள்ளது.
மேற்படி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, வல்லன் நாவுண்டான்மலை மயானம், ஊரதீவு கேரதீவு மயானம் ஆகியவற்றின் புனரமைப்பு வேலைகளும் நடைபெற உள்ளது.
எமது “ஊர் நோக்கிய” புனரமைப்பு வேலைகளை தொடர்ந்து மேற்கொள்ள, சுவிஸ் வாழ் அனைத்து புங்குடுதீவு மக்களையும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். (இதுவரை 2019, 2020 வருட சந்தா செலுத்தாதோர், உடன் அதனை செலுத்தி இணைந்து செயல்படுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி)
“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”
இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
Average Rating