பாகிஸ்தான் நடிகையுடன் தாவூத் இப்ராஹிம் நெருக்கம்!! (கட்டுரை)

Read Time:2 Minute, 27 Second

பாகிஸ்தானில் தங்கியிருக்கும் பிரபல தாதாவான தாவூத் இப்ராஹிம் அங்குள்ள நடிகையுடன் மிக நெருக்கமாக இருக்கும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்ததால் அவர் கவலை அடைந்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் மும்பையில் 1993இல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராஹிம் ஆவார். இந்தியாவினால் தேடப்படும் குற்றவாளியான அவர், தற்போது பாகிஸ்தானில் வசித்து வருகிறார். அவருக்கும் பாகிஸ்தான் நடிகை மெஹ்விஷ் ஹயாத் (வயது 37) என்பவருக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் உயரிய குடிமகன்களுக்கு தரப்படும் ‘தம்கா – -இ – -இம்தியாஸ்’ விருது கடந்த ஆண்டு மெஹ்விஷ் ஹயாத்துக்கு வழங்கப்பட்டது. அதுவரை வெளியுலகிற்கு அதிகம் தெரியாமல் இருந்த அவர் அதன் பின்னர் மிகவும் பிரபலமானார். அதே நேரத்தில் அவர் இந்த விருதுக்கு தகுதியானவரா என்றும் பாகிஸ்தான் திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே பாகிஸ்தான் திரையுலகில் சாதாரணமாக அறிமுகமான அவர் கராச்சியில் வசிக்கும் பிரபல தாதாவான தாவூத் இப்ராஹிமின் கவனத்தை ஈர்த்தார். இதனால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தன. அவற்றை பயன்படுத்திக் கொண்ட அவர் தாவூத்துடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார்.இந்நிலையில் இவருக்கும் தாவூத் இப்ராஹிமுக்கும் இடையேயான நெருக்கத்தை தனியார் தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதையடுத்து கவலையடைந்துள்ள தாவூத் இந்த தகவல் எப்படி வெளியானது என இரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண வாழ்க்கை மனம் கவர்ந்ததாக மாற, உறவுக்கு வழிவகுக்க!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இந்திய விமானப்படையின் சிறப்பு படை!! (வீடியோ)