அணு ஆயுதம்: வட கொரியா விதிக்கும் நிபந்தனை

Read Time:1 Minute, 33 Second

NorthKorea.jpgஅமெரிக்கா தனது அணு ஆயுதங்களை முற்றிலும் அழிக்க முன்வந்தால் வட கொரியாவும் தனது அணு ஆயுத திட்டங்களை நிறுத்தத் தயாராக இருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வட கொரிய செய்த நிறுவனத்திற்கு வட கொரிய அரசு உயர் அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், வட கொரியா தனது அணு ஆயுத திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு முன்பு அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும். அணு ஆயுதத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அதுவரை, வட கொரியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எங்களது ஆயுத பலத்தை அதிகரிப்போம். ஏவுகணைகளை பரிசோதிப்பது, அணு ஆயுதங்களை பெருக்குவது ஆகியவற்றையும் நாங்கள் நிறுத்த மாட்டோம்.

அமெரிக்கா எங்களது கோரிக்கைக்கு முன்வந்தால், ஆறு நாடுகள் பேச்சுவார்த்தைக்கு நாங்களும் முன்வருவோம். அமெரிக்கா முன்வராத வரை எங்களது திட்டத்திலும் மாற்றம் செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
Next post ஈராக்கில் உணவில் விஷம் :7 போலீசார் பலி