“குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..! (படங்கள் & வீடியோ)
புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம் முழுமையாக புனரமைக்கப்பட்டு நேற்றையதினம் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது. நேற்றுக்காலை புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் முழுமையாக புனரமைக்கப்பட்டு, பாக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது, பின்னர் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருமான திரு.இ.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள, புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும் சமாதான நீதவானுமான திரு.எஸ்.கே சண்முகலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாக யாழ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் திரு.கார்த்திகேசு குகபாலன், திரு.குமாரசாமி சந்திரா (ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), திரு.க.வசந்தகுமார் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்), திரு.ரூபன் சர்மா (புங். ஊரதீவு பானாவிடை சிவன் ஆலய சிவாச்சாரியார்), திரு.பிள்ளைநாயகம் சதீஷ் (சமூக ஆர்வலர்), திருமதி.த. சுலோசனாம்பிகை (புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியப் பொருளாளர் மற்றும் தாயகம் சமூக சேவை அமைப்பின் தலைவி), செல்வி.செ.எ.செல்வவதனா (புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய செயலாளர்), பிரான்சில் இருந்து தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு இருந்த புங்குடுதீவு சின்னத்துரை ஆசிரியரின் மகனான திரு.சி.விக்கினேஸ்வரன் (சுவிஸ் ஒன்றிய பொருளாளரின் சகோதரர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பழுதடைந்த நிலையில் இருந்த, புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானத்தில் எரிகொட்டகை அமைத்தல், அதாவது ஏற்கனவே இருந்து அழிந்து போனதால், புதிதாக கேடர் மாற்றி, அதுக்குரிய கூரை யாவும் புதிய தகரங்கள் மூலம் போடப்பட்டது. அவ்விடத்தில் கிரியைகள் செய்வதுக்கான கிணறு இல்லாததினால், புதிதாக கிணறு உருவாக்கப்பட்டு கிணறு அமைத்தல், அதுக்குரிய சுற்றுத்தளம் அமைத்தல் போன்றவை நடைபெற்றதுடன், ஏற்கனவே இருந்த மண்டபம் புனரமைப்பு போன்ற வேலைகள் அதாவது கிரியை மண்டபத்தின் அத்திவாரம் பூசப்பட்டு, மேலே கூரைக்கு வர்ணம் பூசப்பட்டு, மண்டபமும் முழுமையாக பூசப்பட்டு வர்ணம் பூசப்பட்டதுடன், அம்மயானத்தின் பற்றையாகவும், மேடுபள்ளமாகவும் சீரற்ற முறையில் இருந்த சுற்றுப் பகுதிகள் யாவும் இயந்திரங்கள் மூலம் சீராக்கப்பட்டு குறிகட்டுவான் மயான வேலைகள் யாவும் முடிவுக்கு வந்து நேற்றையதினம் மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டது.
மேற்படி புங்குடுதீவு குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானப் புனரமைப்புக்கு முழுமையான நிதி உதவியளித்த வகையில் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய” அனைத்து உறுப்பினர்களுக்கும், மேற்படி நடவடிக்கையை மேற்கொள்ள பலவழிகளிலும் தோள்கொடுத்த சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் உட்பட உலகெங்கும் உள்ள புங்குடுதீவு மக்களுக்கும், மேற்படி நடவடிக்கையை முழுமையாக மேற்கொண்ட கட்டிடக் கலைஞர் திரு.வனோஜன் குழுவினருக்கும், முழுமையான ஆலோசனைகள் வழங்கி மேற்பார்வை இட்ட திரு.இ.இளங்கோவன், திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், மற்றும் இரவுபகல் பாராது தினந்தோறும் அனைவருடனும் உரையாடி அனைத்தையும் மேற்பார்வை இட்டு வழிநடத்தி செயல்படுத்திய “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் உட்பட அனைவருக்கும் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” நிர்வாகசபை சார்பில் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
அம்பலவாணர் அரங்கு ஆசிரியர் வேதனம் கையளிப்பு..!!
இதேவேளை “அம்பலவாணர் அரங்கின்” கலைப்பெருமன்றத்தால் புங்குடுதீவில் பன்னிரெண்டு வட்டார மாணவர்களையும், மற்றும் வேலணை, சரவணை, ஊர்காவற்றுறை போன்ற அயலூர் மாணவ, மாணவிகளையும் இணைத்து நடாத்தப்படும் கல்வி, இயல், இசை, நடனம் உட்பட அனைத்து வகுப்புகளுக்குமான ஆசிரியைகளின் மாத சம்பளத்தில், ஆசிரியை ஒருவரின் மாத சம்பளமான பத்தாயிரம் ரூபாவை (வருடத்துக்கு ஒரு இலட்சத்து இருபதாயிரம் இலங்கை ரூபா) “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் வழங்குவதென ஒன்றிய நிர்வாகசபை ஏகமனதாக எடுத்த தீர்மானத்துக்கு அமைய கடந்த மூன்று வருடமாக வழங்கி வருகிறோம்.
அந்த வகையில் இவ்வருடத்துக்கான “ஆசிரியையின் வேதனமான” ஒரு இலட்சத்து இருபதாயிரம் இலங்கை ரூபா தொகையினையை புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும் சமாதான நீதவானுமான திரு.எஸ்.கே சண்முகலிங்கம் அவர்கள், அம்பலவாணர் கலைப் பெருமன்றத்தின் செயலாளர் பேராசிரியர் திரு. கார்த்திகேசு குகபாலன் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மணற்காடு (கண்ணகைபுரம்) மயானம், வல்லன் நாவுண்டான்மலை மயானம், ஊரதீவு கேரதீவு மயானம் ஆகியவற்றின் புனரமைப்பு வேலைகளும் நடைபெற உள்ளது.
எமது “ஊர் நோக்கிய” புனரமைப்பு வேலைகளை தொடர்ந்து மேற்கொள்ள, சுவிஸ் வாழ் அனைத்து புங்குடுதீவு மக்களையும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். (இதுவரை 2019, 2020 வருட சந்தா செலுத்தாதோர், உடன் அதனை செலுத்தி இணைந்து செயல்படுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி)
“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”
இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
13.08.2020
Average Rating