தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 45 Second

பூண்டுடை பயன்படுத்தி பால் சுரப்பை அதிகரிக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பூண்டு, பால், தேன். அரை டம்ளர் பாலில், 5 பூண்டு பல் போட்டு கொதிக்க வைக்கவும். இதில், தேன் சேர்த்து காலை, மாலை வேளையில் குடித்துவர பால்சுரப்பு அதிகமாகும். பூண்டு தாய்ப்பால் பெருக்கியாக விளங்குகிறது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு நல்ல சத்தூட்டமான உணவு. குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நோயற்ற வாழ்வுக்கு தாய்ப்பால் பயன்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் அழகு கெட்டுப்போய்விடும் என்பது தவறு. தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. கட்டிகள் வராமல் தடுக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய், சேய்க்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.

கேரட், பீட்ரூட்டை பயன்படுத்தி பால்சுரப்பை அதிகப்படும் ஜூஸ் தயாரிக்கலாம். கேரட், பீட்ரூட் சாறு சமஅளவு எடுக்கவும். இதில் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து குடித்துவர பால் சுரப்பு அதிகரிக்கும். கேரட், பீட்ரூட் ஆகியவற்றில் வைட்டமின் ஏ, டி உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டவை. உள் உறுப்புகளுக்கு பலம் தருபவை.

முருங்கை கீரையை பயன்படுத்தி பால்சுரப்பை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முருங்கை கீரை, உப்பு, மிளகுப்பொடி, நெய். ஒருபிடி அளவுக்கு முருங்கை கீரை எடுக்கவும். இதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீர்விட்டு வேக வைக்கவும். இதில், சிறிது மிளகுப் பொடி, கால் ஸ்பூன் நெய் சேர்க்கவும். இதை மதிய வேளையில் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

பல்வேறு நன்மைகளை கொண்ட முருங்கை, தாய்ப்பால் பெருக்கியாக விளங்குகிறது. முருங்கையில் கால்சியம், வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. குழந்தைகளின் முதுகு, மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முருங்கை கீரை சாப்பிட்டுவது தாய், சேய்க்கு நல்லது. துளசி, அதிமதுரத்தை பயன்படுத்தி பால்சுரப்பை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: துளசி, அதிமதுரம், பனங்கற்கண்டு, பால். 10 துளசி இலைகள், அரை ஸ்பூன் அதிமதுர பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். இதில், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு வரும் நோய்கள் தடுக்கப்படுகிறது. துளசி அற்புதமான மருத்துவ குணம் கொண்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்!! (வீடியோ)
Next post கொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் ? (கட்டுரை)