தெருவோர குட்டி நூலகம்!! (மகளிர் பக்கம்)
நீண்ட தூரப் பயணத்தின்போது புத்தகம் வாசிப்பது பலரது வழக்கம். இதற்காக ரயில் பயணத்தின்போது பலர் தங்களுக்கு விருப்பமான புத்தகத்தை எடுத்து செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது விருப்பமான நூலை எடுத்து செல்ல முடியாவிட்டால் இனி கவலைப்பட வேண்டாம். நாட்டின் வடகிழக்கு மாநிலமான மிஸோரமின் தலைநகர் ஐசாவால் பகுதியில் நீங்கள் பயணம் செய்தால் உங்களுக்கு சாலையோரங்களில் நிறுவப்பட்டுள்ள குட்டி நூலகம் உங்களின் வாசிப்பு பசிக்கு உதவக்கூடும். இந்திய வருவாய்த் துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் என்பவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், மிஸோரமின் தலைநகர் ஐசாவிலில் நிறுவப்பட்டுள்ள சாலையோர குட்டி நூலகம் பற்றிய தகவலை படங்களுடன் வெளியிட்டிருந்தார்.
அதில் இதைத்தான் நாட்டில் உள்ள எல்லா நகரங்களும் இனி பின்பற்ற வேண்டும். ஐசாவாலில் இதுபோல இரண்டு சாலையோர குட்டி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு நாட்டை உருவாக்குவதில் நூலகங்களின் பங்கு சிறப்பானது’ என்ற வாசகத்துடன் கூடிய நூலக வீடியோ வைரலாகி வருகிறது.
Lalhruaitluanga Chawngte என்பவர் இந்த நூலகத்தை அமைத்து பராமரித்து வருகிறார். எனவே இனி உங்களது விருப்பமான கதை புத்தமாகட்டும், நாவலாகட்டும், கட்டுரை என எதையும் தவற விட வேண்டியிருக்காது.. இதில் உள்ள நோட்டில் உங்கள் பெயரை எழுதி நீங்கள் எடுத்துள்ள புத்தகங்களின் பெயர் மற்றும் உங்களின் செல்போன் எண்ணைக் குறிப்பிட்டால் போதும். இதற்கான கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை. மீண்டும் அவ்வழியே திரும்பும்போது அந்த புத்தகத்தை திருப்பி தந்தால் போதும்.
இத்தகைய நூலகங்கள் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, இலவசமாக புத்தகங்களை பரிமாறிக் கொள்ள உத வு வதன் மூலமாக வாசிப்பு சார்ந்த குழுக்களை உண்டாக்க உதவுகிறது. அவரது இந்தப் பதிவிற்கும், சாலையோர நூலகம் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும் ட்விட்டர் பயனாளர்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த சாலையோர நூலகங்களின் வாசகர்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், தற்போது செல்போன்தான் உலகம் என்று இருக்கும் இந்த தலைமுறையினருக்கு இது போன்ற புத்தக வாசிப்பு என்பது மிகவும் அவசியமானது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating