ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை எரிக்க முயற்சி: தீ பரவியதால் 87 குடிசைகள் சாம்பல்
திருவொற்றிïரை அடுத்த திருச்சினாங்குப்பம் பகுதியில் கடலோரத்தில் புதுநகர் எனும் மீனவகுப்பம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன. அதில் ஒரு குடிசையில் விதவைப் பெண் வீரம்மாள் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வீரம்மாள் தன் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவருடன் அவரது தாயார் நாகம்மாள், குழந்தைகள் தினேஷ், திலகா, பிச்சாண்டி ஆகியோரும் படுத்து இருந்தனர். நள்ளிரவு 2 மணிக்கு அவர்கள் குடிசைப் பகுதிக்கு 2 மர்ம மனிதர்கள் வந்தனர்.
வீரம்மாள் குடிசை வீட்டின் கதவை வெளியில் பூட்டினார்கள். திறக்க முடியாத படி கதவை கயிறுகளால் கட்டினார்கள். பிறகு வீட்டின் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டனர்.
திடீரென வீட்டில் தீ பிடித்து எரிவதை கண்டதும் வீரம்மாள் அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளை எழுப்பி வெளியில் ஓடி வரமுயன்றார். கதவு வெளிபக்கமாக பூட்டப் பட்டிருந்ததால் முடிய வில்லை.
தங்களை கொல்ல தீ வைக்கப்பட்டுள்ளதை அறிந்த வீரம்மாள் உதவி கோரி கூச்சலிட்டார். அவர் சத்தம் கேட்டு பக்கத்து குடிசைகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வீட்டு கதவை உடைத்து வீரம் மாளையும் அவர் குடும்பத் தினரையும் மீட்டனர்.
இதற்கிடையே வீரம்மாள் குடிசை வீட்டில் பிடித்த தீ பக்கத்து குடிசைகளுக்கு மளமளவென பரவியது. தீயை அணைக்க அந்த பகுதி மக்கள் போராடினார்கள். ஆனால் தீ பல தெருக்களுக்கு பரவியது.
சுமார் ஒரு மணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது என்றாலும் அதற்குள் 87 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன. வீரம்மாள் தான் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 பவுன் நகை எரிந்து போய் விட்டதாக கண்ணீர் விட்டு கதறியபடி கூறினார்.
வீரம்மாள் குடும்பத்தினரை உயிருடன் எரிக்க முயன்றவர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்கள் வைத்த தீயில் 10 லட்சத்துக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. குடிசைவாசிகள் உணவு உடை இழந்து தவித்தனர்.
தீ வைக்கப்பட்ட சம்ப வம் குறித்து அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ரன்வீர்பிரசாத், அம்பத்தூர் தாசில்தார் தீனதயாளன், அமைச்சர் கே.பி.பி.சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு அதிகாரிகள் உதவிகள் செய்தனர். பாதிக்கப் பட்டவர்கள் தற்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...