எதிர்ப்பு சக்தி வழங்குது சோயா!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 52 Second

சோயா போன்ற சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுகளுடன் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது, காச நோயாளிகளின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நல்ல உடல்நிலையை மேம்படுத்தும். இந்த உணவுகள் ஹெச்ஐவி நோயாளிகளுக்கும் நல்ல எதிர்ப்பு சக்தி வழங்குகின்றன. காசநோய் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவு இது! தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி ஒருங்கிணைப்பாளர், மருத்துவர் ஆர்.ஜி.ஆனந்திடம் ஆய்வு குறித்துப்
பேசினோம்…

‘‘வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகள் பொதுவாகவே எல்லாருக்கும் நல்லது. ஊட்டச்சத்து அதிகமுள்ள இந்த உணவு கள் ஹெச்ஐவி பாதித்தவர்களுக்கு உகந்தது. இதனால் அவர்களது நோய் சரியாகாது… ஆனால், நோயின் தாக்கம் குறையும். சத்துமிக்க சிறுதானிய உணவுகள், சோயா, கோதுமை, பச்சைக் காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிடி4 எனும் செல்கள் ஒருவகை வெள்ளை ரத்த அணுக்கள். அது அனைவரது உடலிலும் இருக்கும். இது நம் உடலை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும். ஹெச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெச்ஐவி வைரஸின் தாக்குதலால் இந்த சிடி4 செல்கள் அழிய ஆரம்பிக்கும். இதனால் அவர்களுக்கு பலவகை நோய்த்தாக்குதல் எளிதில் ஏற்படும். பொதுவாக ஹெச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடம்பில் 350க்கும் அதிக சிடி4 செல்கள் இருந்தால் அந்நிலையை Pre-ART என்கிறோம். 350க்கும் கீழே சிடி4 செல்கள் இருந்தால், அந்நிலையை On-ART என்கிறோம்.

Antiretroviral therapy (ART) என்பது சிடி4 செல்கள் 350க்கும் கீழே போகும் நிலையில் ஹெச்ஐவி நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை. அதாவது, பிரி-ஏஆர்டி என்ற நிலையில் இருக்கும் ஹெச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் தேவையில்லை. ஆன்-ஏஆர்டி என்ற நிலையில் இருக்கும் ஹெச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் தேவை. இந்நிலையில் அவர்களுக்கு சிடி4 செல்களைக் காக்க மருந்துகள் வழங்கப்படும்.

பிரி-ஏ.ஆர்.டி நிலையில் உள்ளவர்கள் சிறுதானிய உணவு கள், சோயா மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடும் போது, சிடி4 செல்களின் எண்ணிக்கை ரொம்பவும் குறைந்து போகாமல் காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கும். ஆன்-ஏஆர்டி நிலையில் அவர்களுக்கு சிடி4 செல்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து opportunistic எனும் தொற்றுப் பிரச்னை ஏற்பட்டு, அவர்களது பலவீனமான எதிர்ப்பு சக்தி திறனை இன்னும் தாக்க ஆரம்பிக்கும். அதனால் அவ்வேளையில் சிடி4 செல்களை பாதுகாக்க அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்படும். அத்துடன் ஊட்டச்சத்து உணவு எடுத்துக்கொள்ளும் போது, சிடி செல்களை காக்கவும் உதவும். செல்கள் அழியும் வேகம் தடுக்கப்படும். நோய் பாதிப்பை குறைக்கும்.

ஹெச்ஐவி நோயாளிகளுக்கு நல்ல ஊட்டச்சத்து உணவுகள் எந்த வகையில் உதவுகின்றன என்பதைக் குறித்து தென்னாப்பிரிக்காவின் நோய்த் தடுப்பு மையமும் (CDS), வடகொரியா தொண்டு நிறுவனமும் ஆய்வுகள் நடத்தியுள்ளன. சோயா மற்றும் பச்சைக் காய்கறிகள் நோயாளியின் உடல் தகுதியை அதிகரிக்கின்றன என்பதையே அந்த ஆய்வுகளும் நிரூபித்துள்ளன…’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேவி**ய வனிதா ஆணவத்தை அடக்கிய இயக்குனர் சேரன் பரபரப்பு மோதல்!! (வீடியோ)
Next post வயதானால் இன்பம் குறையுமா? (அவ்வப்போது கிளாமர்)