உடல் பருமனை குறைக்கும் கிச்சிலி பழம்!! (மருத்துவம்)
உடல் பருமனை குறைக்க கூடியதும், உள் உறுப்புகளை பலப்படுத்தும் சக்தி கொண்டதும், புற்றுநோய் வராமல் தடுக்கவல்லதும், முக சுருக்கங்கள், பருக்களை மறைய செய்வதும், இருமலை சரிசெய்ய கூடியதுமான கிச்சிலி பழத்தை பற்றி நாம் இன்று பார்ப்போம்.
எலுமிச்சை, ஆரஞ்சு, நார்த்தை, சாத்துக்குடி வகையை சார்ந்தது கிச்சிலி பழம். சிட்ரிக் அமிலம் நிறைந்த இந்த பழம், பசியை தூண்டக்கூடியது. செரிமானத்தை சீர்படுத்தும் அற்புதமான உணவாகிறது. சிறுநீரை அதிகப்படுத்தும் தன்மை கொண்டதால் கற்கள் வராமல் காக்கிறது. புற்றுநோய்க்கு தடுப்பு மருந்தாகிறது. கிச்சிலி பழத்தோலை பயன்படுத்தி உள் உறுப்புகளை பலப்படுத்தும் தேனீர் தயாரிக்கலாம். 2 டம்ளர் தண்ணீரில் ஒரு பங்கு பழத்தோலை துண்டுகளாக்கி போடவும். கால் பங்கு லவங்கம், ஒரு பங்கு வெற்றிலை, ஒரு பங்கு பன்னீர் ரோஜா இதழ் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இதை வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கவும். காபி, டீ ஆகியவற்றுக்கு பதிலாக குடிக்கலாம். இது உள் உறுப்புகளை பலப்படுத்தும். குழந்தைகள், பெரியவர்களுக்கு வரும் இருமல் சரியாகிறது. ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது. வயிற்று கோளாறு, சிறுநீரக கோளாறு, மலச்சிக்கல், இதய கோளாறு உள்ளிட்டவற்றுக்கு இந்த தேனீர் பயன்தரும்.கிச்சிலி தோலை பயன்படுத்தி உடல் பருமன், கொழுப்பை குறைக்கும் தேனீர் தயாரிக்கலாம். கிச்சிலி பழத்தோலை நீர்விடாமல் பொடித்து வைத்து கொள்ளவும். தோல் பவுடர் ஒரு ஸ்பூன், 20 மிளகு எடுத்துக் கொண்டு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கவும். இது உடல் பருமனை குறைக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது.கிச்சிலி பழம் வைட்டமின் சி நிறைந்தது. எலும்புகள், ஈறு, பல் ஆகியவற்றுக்கு பலம் சேர்க்க கூடியது. கேன்சரை தடுக்க கூடியது. ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கும். கொழுப்பு சத்தை குறைக்கிறது. மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது. முகப்பூச்சு மருந்தாகவும் இது பயன்படுகிறது. காயவைத்து பொடி செய்த பழத்தோலுடன், சமஅளவு தயிர் கலந்து முகத்தில் பூசினால் முக சுருக்கங்கள், பருக்கள் சரியாகும். கரும்புள்ளிகள், மருக்களை நீக்கி முகத்துக்கு பொலிவை தரும்.
கிச்சிலி பழத்தை கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேனீர் தயாரிக்கலாம். பொடித்து வைத்துள்ள பழத்தோலுடன் ஒரு மடங்கு சர்க்கரை சேர்த்து நீர்விட்டு பாகு பதத்தில் தயாரிக்க வேண்டும். பாகுவை ஆற வைத்து அதனுடன் கிச்சலி பழச்சாறு சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர், பாகுவில் 2 அல்லது 3 ஸ்பூன் எடுத்து, அதனுடன் நீர்விட்டு குடிக்கலாம். இதனால் கல்லீரல் பலமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உள் உறுப்புகள் பலப்படும். கிச்சிலிதோல் மணபாகு உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். செரிமான கோளாறை சரிசெய்யும். கல்லீரல், மண்ணீரலுக்கு பாதுகாப்பானது. பித்தத்தை சரி செய்யும் தன்மை கொண்டது.
Average Rating