மாஸ்க் மெகதோ டிசைனர் மார்ஃப்ஸ்!! (மகளிர் பக்கம்)
2025ல் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் பெயர்களை குவரண்டினா ஜோசி.. லாக்டவுன் சிங் ரத்தோர்.. கோவிட் அவாஸ்தி.. கொரோனா பால்சிங்,, சோசியல் டிஸ்டென்சிங், மாஸ்க் மெகதோ.. என கொரோனாவோடு தொடர்பில் இருக்கும் வார்த்தைகளை வாசிக்க வாசிக்க நமக்கு அடக்க முடியாமல் சிரிப்புதான் வந்தது.
இது மட்டுமா..? கூடவே நமது ஃபேஷன் உலகமும் தன் பங்குக்கு விதவிதமான மாஸ்க்குகளை தொடர்ந்து டிரெண்டாக்கினர். பெண்களின் விருப்பம் அறிந்து கஸ்டமைஸ்ட் மாஸ்க்கினை தயாரிக்கத் தொடங்கியுள்ள ஃபேஷன் டிசைனர் ரம்யா சேகரிடம் பேசியபோது..வெளியில் பயணித்தாலே மாஸ்க் அணிவது கட்டாயமாக, பள்ளி கல்லூரி மாணவிகள், இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் ஸ்கார்ஃப்+மாஸ்க் அணிவது நம் க்ளைமெட்டில் ரொம்பவே படுத்தும். எனவே அணியச் சுலபமாய் மாஸ்க்+ஸ்கார்ஃப் இணைந்த மார்ஃப்ஸ் (Marfs) வகை மாஸ்க்குகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளோம். இது டிரெண்டியாகவும், அணிய சுலபமாகவும், சட்டென கவரும் விதத்திலும் உள்ளது.
பெண்கள் அணியும் சுடிதார் மெட்டீரியல் அல்லது சேலைகளில் வரும் துணிகளை வைத்தே மார்ஃப்ஸ் தயாரிக்கலாம். அல்லது கூடுதல் கிரியேட்டிவாய் பேஃப்ரிக் பெயின்டிங் செய்து புதுமையாகவும் அணியலாம். டிரெண்டியாய் அணிவதற்கு சிந்தடிக் மெட்டீரியலும் ரொம்பவே செட்டாகும் என்றவர், ஃபேஷன் என்பது ஒருத்தர் தன் ஸ்டைலை என்னமாதிரியாக வெளிப்படுத்த நினைக்கிறார் என்கிற மூடைப் பொருத்தது. மாஸ்க் அணியும் பெண்கள் மட்டும் இதற்கென விதிவிலக்கா எனச் சிரித்தவர்.. இதையும் எப்படி ஸ்டைல் ஸ்டேட்மெண்டாய் மாற்றலாம் என யோசித்த நம் இளைஞர் படை நாங்கள் எதைச் செய்தாலும் டிரெண்டாக்காமல் விடமாட்டோம் என களம் இறங்கத் தொடங்கிவிட்டனர் என்கிறார். சில கல்லூரி விரிவுரையாளர்கள், வங்கி ஊழியர்களும் மார்ஃப்ஸ்(marfs) பேட்டன் மாஸ்க்கை விரும்பத் தொடங்கியுள்ளனர்.
வாஷ் செய்து திரும்ப பயன்படுத்தும் வகையில் பேப்ரிக் வொர்க் அல்லது சிந்தடிக் வகை மாஸ்க் ஒன்றிரண்டு கையில் இருந்தாலே உடைக்குத் தகுந்தாற்போல் நாம் செல்லும் இடத்திற்கு அணிந்து செல்லலாம். மேலும் கிரியேட்டிவாய் இதில் சில பட்டன்ஸ், ஓவர் கோர்டுகளில் வருவது மாதிரியான எக்ஸ்ட்ரா ரிவர்ட்ஸ்(rivets) எல்லாம் ஃபிக்ஸ் செய்யலாம். நமது உடைகளில் இருக்கும் சில பேட்டனையும் மாஸ்க்கிலும் கொண்டு வர முடியும்.
விலை என்பது தயாரிக்கும் மெட்டீரியல் மற்றும் நேரத்தைப் பொறுத்தது. ரெகுலர் மாஸ்க் என்றால் 30ல் இருந்து 50 வரை விற்பனைக்கு வருகிறது. கஸ்டமைஸ்ட் மாஸ்க்குகளை ரூபாய் 50 ல் இருந்தே 250 வரை தயாரிக்கலாம். மேலும் எல்லோரும் மாஸ்க் அணிந்து திருமணம் செய்வார்களா எனத் தெரியாது. ஆனால் அணிந்தும் செய்யலாம் என்றவர், சில வகை ப்ரைடல் லெகன்ஹாவிற்கு இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய டிசைனர்ஸ் சீக்வின்ஸ் மாஸ்க்குகளை மணப் பெண்களுக்குத் தயாரித்து வைத்திருக்கிறார்கள் என முடித்தார்.மாஸ்க்கை வைத்து கிரியேட்டிவ் உலகம் இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறதோ?
Average Rating