ஆக்ரோஷம் பித்தம் தணிக்கும் பழையசோறு!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 18 Second

அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம் ,வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம்சாமி!” -இது வெயில்காலத்தில், வேப்பமரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக் கூடியவசனம். இது வெறும் வார்த்தை மட்டுமல்ல 100 சதவிகிதம் உண்மை. ‘ஏனென்றால், நீராகாரம் என்கிற பழைய சாதத்தில் தான் அத்தனைசத்துகளும் இருக்கின்றன.

‘நம் முன்னோர்கள் வாழ்வோடு இரண்டறக்கலந்தது பழையசாதம். காலையில் ஒரு முட்டிகஞ்சியை, வெங்காயம், பச்சைமிளகாயோடு சேர்த்துக்குடித்துவிட்டு தான் வயலுக்குப் போவார்கள். அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப்பழஞ்சோறு தான் கொடுத்தது.

‘சாதத்தைவடித்து, அதில் தண்ணீர் ஊற்றி வைத்தால், மறுநாள் காலையில் அது பழையசாதம். சாதத்தை அலுமினியம், மண், ஸ்டீல் எனப் பல்வேறு பாத்திரங்களில் வைத்து பின்னர் அதை ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்ததில் மண்பானை பழையசாதத்தில் தான் நல்ல தரமும் வாசமும் இருந்தது.

சாதத்தில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவிடும் போது அதில் நுண்ணுயிர்கள்(லாக்டிக்ஆசிட்பாக்டீரியா) வளர்கிறது. லேசாக அமிலத்தன்மையும் உண்டாகும். அதனால் தான் அதில் புளிப்புச் சுவை ஏற்படுகிறது. நுண்ணுயிர்கள், வைட்டமின்களை உருவாக்குவதால், ‘பி’ வைட்டமின்கள் அதிகரிக்கிறது. புரதமும் மாவுச்சத்தும்(ஸ்டார்ச்) எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச் சத்துக்கள் அதிகரிக்கப்படுவதுதான், அதன் சத்துக்குக் காரணம்.

சாதம் மீதி இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதை விட,தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது, செரிமானத்துக்கும் நல்லது, சத்துகளும் கிடைக்கும். அந்த ஊட்டச் சத்துகள் கரைந்திருப்பதால், நீராகாரமும் ரொம்ப நல்லது. மேலும், பழைய சாதம் சாப்பிட்டால் எடை கூடும், தூக்கம் வரும் என்று சொல்வதில் உண்மை இல்லை. எந்த உணவையும் வயிறு முட்ட சாப்பிட்டால் தான் தூக்கம் வரும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போதுதான் எடை கூடும். வெறும் பழையது மட்டும் சாப்பிடாமல், கூடவே துவையல் அல்லது காய்கறிப் பொரியல் ஏதாவது சேர்த்து, ‘பேலன்ஸ்டு’ உணவாக சாப்பிட வேண்டும். பழையசாதத்தின் ஆயுள் 15 மணி நேரம் தான். முதல் நாள் இரவு 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால், அதில் இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும். அதற்கு மேல் பழையசாதத்தை அறையின் வெப்ப நிலையில் வைக்கக் கூடாது.சர்க்கரை நோயாளிகள், அளவோடு சாப்பிடலாம்

பழைய சாதம் பற்றி, நம்பாரம் பரியமருத்துவம் என்னசொல்கிறது?

‘அகத்தியர் குணவாகடம்’ என்னும் மருத்துவ நூலில் பழஞ்சோற்றின் பெருமை பற்றி, ஒரு பாடலே இருக்கிறது. பொதுவாகவே, வெயில்காலத்தில் பித்தம் அதிகமாக இருக்கும். பித்தம் என்பது நெருப்பின் குணம். அதனால், பித்தம் சார்ந்த நோய்களும் அதிகமாக ஏற்படும். செரிமான நெருப்பு அதிகரிப்பதால், பெரும் பசி எடுக்கும். உடல் எரிச்சல் ஏற்படும். இவை எல்லாவற்றையும் ‘நியூட்ரலைஸ்’ செய்து, உடம்பின் தேஜஸைக் கூட்டுகிறது பழையசோறு. ‘பிரமேயம்’ எனப்படும் மனநிலைக் குறைபாடுகள், வன்முறையைத்தூண்டும் ஆக்ரோஷம் ஆகிய உணர்வுகளை இந்த உணவு கட்டுப்படுத்தும். பித்தத்தைக் கட்டுப்படுத்துவதால், அதன் எதிர்க் குணமான உடலில் கபத்தின் தன்மை அதிகரிக்கிறது. அதனால் தான், பழையது சாப்பிட்டதும் நமக்குக் குளுமையான உணர்வு ஏற்படுகிறது.
சுருங்கச்சொன்னால், ‘ஆற்று நீர் வாதம் போக்கும், அருவிநீர் பித்தம் போக்கும், சோற்றுநீர் இரண்டையும் போக்கும்’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அற்புத மூலிகை பிரண்டை!! (மருத்துவம்)
Next post குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!! (அவ்வப்போது கிளாமர்)