கருணா அணி அறிக்கை

Read Time:1 Minute, 52 Second

00003.gifமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பனிச்சங்கேணி பகுதியில் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவம் தொடர்பாக கருணா அணியினரால் நேற்று ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கட்டுமுறிவு, பனிச்சங்கேணி பகுதிகளில் உள்ள வன்னிப்புலிகளின் இரண்டு முகாம்கள் மீது தாங்கள் ஒரே நேரத்தில் மேற்கொண்ட தாக்குதலில் 40 வன்னிப் புலிகள் கொல்லப்பட்டதுடன் 70க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 04 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் புலிகளின் இரண்டு முகாம்கள் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் பெரும் தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கருணாஅணியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலின் போது கொல்லப்பட்ட வன்னிப்புலி உறுப்பினர்கள் 26 பேரின் உடலங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் இவற்றில் 12 உடலங்களை வாழைச்சேனை மருத்தவமனையில் கையளித்துள்ளதாகவும் கருணாஅணி தெரிவித்துள்ளது.

அதேவேளை வன்னிப்புலிகளுடன் இடம்பெற்ற அம்மோதலின்போத தமது உறுப்பினர்கள் 08பேர் கொல்லப்பட்டதாகவும் 15பேர் காயமடைந்துள்ளதாகவும் கருணா அணியினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முஸ்லிம் மத குருக்கள் பத்திரிகைகளுக்கு எச்சரிக்கை -ஜோதிட கணிப்புகளை வெளியிடக்கூடாது
Next post அணு குண்டு சோதனை நடத்தியது வட கொரியா