முஸ்லிம் மத குருக்கள் பத்திரிகைகளுக்கு எச்சரிக்கை -ஜோதிட கணிப்புகளை வெளியிடக்கூடாது

Read Time:1 Minute, 47 Second

Muslim.2.jpgசவுதி அரேபியாவில் உள்ள பத்திரிகைகள் ஜோதிடக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இவை அங்கு பிரபலமாக இருக்கின்றன. ஜோதிடக்குறிப்புகளை வெளியிடுவதற்கு அந்த நாட்டு மத குருமார்கள் தடைவிதித்து உள்ள போதிலும் பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இதனால் கோபம் கொண்ட மத குருமார்கள் ஜோதிடக்கணிப்புகளை வெளியிடுவது இஸ்லாத்துக்கு எதிரானது.

சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் நம் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் காரணம் என்று நம்புவது இஸ்லாமிய காலத்துக்கு முன்பு இருந்து வரும் மூடநம்பிக்கை ஆகும் என்று எச்சரித்து இருக்கும் அவர்கள், இஸ்லாமியச்சட்டம் இப்படி ஜோதிடம் பார்ப்பதை தடைசெய்கிறது. கடவுள், அவரது தூதர், மத குருமார்கள் கூறும் ஆலோசனையை முஸ்லிம்களும், பத்திரிகைகளும் கேட்டு நடக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

சவுதி அரேபியர்கள் பலருக்கு கிறிஸ்தவ காலண்டர்படியான பிறந்த தேதி தெரியாது. அதனால் அவர்கள் ஜோதிடக்கணிப்புகளை படிப்பது கிடையாது. ஆனால் புதிய தலைமுறையினர் தான் ஜோதிடக்கணிப்புகள் குறித்து பைத்தியமாக இருக்கின்றனர் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கூறிஉள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை ராணுவம் குவிப்பு
Next post கருணா அணி அறிக்கை