லட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்! (மகளிர் பக்கம்)
இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்பட்ட கடந்த ஜனவரி 26ம் தேதி, 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 34 பெண்கள் இடம்பெற்றிருந்தனர். சிறந்த இசைக்கலைஞர், கல்வியாளர், விஞ்ஞானிகள் என பலதுறை சார்ந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் சில சாமானியர்களும் இடம்பெற்றிருந்தனர். அதிலும் 72 வயதான பழங்குடியின பெண் ஒருவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது உண்மையில் அந்த பெண்ணுக்கு கிடைத்த கவுரவம் என்பதை விட விருதுக்கு கிடைத்த கவுரவம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
கர்நாடக மாநிலம் Honalli கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் துளசி கவுடா என்ற மூதாட்டிதான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர். வீடுகள் கட்டுவதற்காக பல்வேறு மரங்களை அழித்துவரும் நபர்கள் வாழும் இந்த நாட்டில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதை நிரந்தர தொழிலாக செய்து வருகிறார் துளசி. எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், இதுவரை அவர் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை மரங்களாகவும் வளர்த்து சாதனை படைத்துள்ளார். அவர் பழங்குடியின பெண் என்பதால் மரங்கள், விதைகள், அவற்றின் தன்மை எல்லாம் அத்துபடி. இதனால் அவரை பொதுமக்கள் வனங்களின் கலைக்களஞ்சியம் என்றே அழைக்கிறார்கள். இதை விட சிறப்பு அம்சமாக மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கடந்த ஜனவரி 28ம் தேதி வெளியிட்ட சமூகவலைத்தள பதிவில் ஸ்ரீ புகழப்படாத கதாநாயகி’ என்று அடைமொழியிட்டு துளசி பாட்டியின் சேவையை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
மேலும் தன்னலமற்ற சேவையால் நாட்டையே பசுமையாக மாற்றி வரும் அந்த பாட்டியின் பங்களிப்பு மகத்தானது என்றும் அவரது வாழ்க்கை இளந்தலை முறையினருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றும் அமைச்சர் பாராட்டியுள்ளார். துளசி பாட்டி அடிப்படை கல்வி கூட கற்கவில்லை. ஆனால் அவருக்கு செடிகளை பற்றியும், மூலிகை செடிகளை பராமரிப்பது பற்றிய பரந்த அறிவும் உள்ளது. மரங்களை வளர்ப்பது மட்டுமின்றி வளர்ந்து விட்ட மரங்களை காட்டுத்தீயில் இருந்து எப்படி காப்பது என்ற தொழில்நுட்பமும் அறிந்தவர். அதனால் தான் சிக்கலான காட்டுத்தீயை அணைக்க தவிக்கும் போதெல்லாம் வனத்துறையினர் துளசியின் உதவியை நாடுகின்றனர். இவரது சேவையை பாராட்டிதான் இந்த விருதுக்கு துளசியை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating