பிரான்சு நாட்டில் பொது இடங்களில் புகைபிடிக்கத்தடை அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வருகிறது

Read Time:1 Minute, 27 Second

FranceFlags.gifபிரான்சு நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பொது இடங்களில் புகைபிடிக்கத்தடை விதிக்கப்படுகிறது. மதுபான விடுதிகள், ஓட்டல்கள் ஆகிய இடங்களில் ஒரு ஆண்டு தாமதமாக இந்த தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நாட்டு பிரதமர் டொமினிக் டி வில்லேபின் 2 கட்டமாக வெளியிடுவார் என்று தெரிகிறது.

பிரான்சு நாட்டில் புகைபிடிக்கும் 66 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் பலியாகிறார்கள். புகைபிடிப்பவர்கள் அருகில் இருந்து அந்த புகையை சுவாசிக்க நேரும் 5 ஆயிரத்து 800 பேரும் பலியாவதாக பிரான்சு நாட்டு எம்.பி.க்கள் தெரிவித்தனர். பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு முதன்முதலில் தடைவிதித்த நாடு அயர்லாந்து ஆகும். அந்த நாடு 2004-ம் ஆண்டு இந்த தடையை விதித்தது. இத்தாலி, சுவீடன், ஸ்காட்லாந்து, நார்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு தடை விதித்து உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தீபாவளி விருந்தாக 7 புதிய படங்கள்
Next post யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை ராணுவம் குவிப்பு