சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இலங்கை வெற்றி

Read Time:2 Minute, 33 Second

Cricket-SLK.jpgஅகமதாபாத்தில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் கோப்பை (மினி உலகக் கோப்பை) கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் வங்கதேச அணியை இலங்கை 37 ரன்களில் வீழ்த்தியது. மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நேற்று தொடங்கியது. முதலில் இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கிடையே தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

அகமதாபாத்தில் நடந்த முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கையும், வங்கதேசமும் விளையாடின. முதலில் ஆடிய இலங்கை அணி அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய உபுல் தரங்கா 105 ரன்களைக் குவித்தார்.

மரவான் அட்டப்பட்டு 41 ரன்களை சேர்த்தார். கேப்டன் ஜெயவர்த்தனே 35 ரன்களையும், ஜெயசூர்யா 31 ரன்களையும், சங்கக்காரா 22 ரன்களையும் எடுத்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இலங்கை 302 ரன்களை குவித்தது.

பின்னர் களம் இறங்கிய வங்கதேசம் முதல் 2 விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்தது. ஹசன் மற்றும் அகமது ஆகியோர் நிலைத்து நின்று ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். ஹசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 69 ரன்களை சேர்த்தார். அகமது 33 ரன்களும், ரேஸா 34 ரன்களையும் எடுத்தனர்.

பின்னர் வந்த வீரர்களில் மொர்டசா (29), ரஸ்ஸாக் (21) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

இறுதியில், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 265 ரன்களை மட்டுமே வங்கதேசத்தால் சேர்க்க முடிந்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டென்மார்க் நாட்டில் மீண்டும் சர்ச்சை- நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரம் வரையும் போட்டி
Next post தீபாவளி விருந்தாக 7 புதிய படங்கள்