ஆரோக்கியமான மூளைக்கு ஆப்பிள் சாப்பிடுங்க!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 42 Second

நினைவுத்திறன் அதிகரிக்க, ஞாபக மறதியை நீக்க வல்லாரைக் கீரை சாப்பிடுங்க! என்று சொல்வது வழக்கம். இனி, ஆப்பிளும் சாப்பிடுங்க என்று சொல்லலாம். ஆப்பிள் சாறுக்கும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. நம்மில் பலருக்கு வயது ஏற, ஏற நினைவாற்றல் குறைந்து மறதி ஏற்படுவது இயல்பாகவே உள்ளது.

மறதியை மறக்க வேண்டுமானால் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிள் சாப்பிடுவதாலும், ஆப்பிள் சாறு அருந்துவதாலும் மூளை மன அழுத்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும். மேலும், வயது ஏற ஏற ஏற்படும் ஞாபக மறதியும் தடுக்கப்படும் என்று மெசக்யுசெட்ஸ் லோவெல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆரோக்கியமான மூளைக்கு ஆப்பிள்கள் அதிக நார்ச்சத்துள்ள உணவாகும். இவை செரிமானத்துக்கும், உடல் எடை குறைவுக்கும் ஆப்பிள்கள் ஏற்றவை. ஆப்பிள்களில் அதிக ஊட்டச்சத்து இருப்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்த் தடுப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. உலக அளவில் 7,500 ஆப்பிள் வகைகள் பயிரிடப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தில் இருந்தா என்கிட்ட மோதுங்க!! (வீடியோ)
Next post அரிசியில் ஆரோக்கிய ஐஸ்கிரீம்!! (மகளிர் பக்கம்)