டென்மார்க் நாட்டில் மீண்டும் சர்ச்சை- நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரம் வரையும் போட்டி
டென்மார்க் நாட்டில் நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரம் வரையும் போட்டி நடத்தப்பட்டது. இது அந்நாட்டு டி.வி.யில் காட்டப்பட்டது. இஸ்லாம் மதத்தில் உருவ வழிபாடு கடைபிடிக்கப்படுவதில்லை. இந்நிலையில் டென்மார்க் நாட்டு பத்திரிகை ஒன்று, இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை படமாக வரைந்ததுடன் அவரை கேலி செய்யும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட இப்படம், பின்னர் மற்ற நாட்டு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. இதற்கு உலகம் முழுவதும் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆசிய, ஆப்பிரிக்க, மேற்கு ஆசிய நாடுகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியானார்கள்.
மீண்டும் சர்ச்சை
இந்நிலையில், டென்மார்க் நாட்டில் மீண்டும் நபிகள் நாயகத்தை வைத்து சர்ச்சை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியாக இருப்பது டேனிஷ் மக்கள் கட்சி. இக்கட்சி இனவெறி கொண்ட கட்சியாகும். வெளிநாட்டினர் டென்மார்க் நாட்டில் குடியேறுவதையும் இக்கட்சி எதிர்க்கிறது. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் இக்கட்சி 13 சதவீத ஓட்டு வாங்கி உள்ளது.
இக்கட்சியின் இளைஞர் அணியினருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரம் வரையும் போட்டி நடத்தப்பட்டுள்ளது. அதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு கேலிச்சித்திரம் வரைந்த காட்சி, தற்போது டென்மார்க் அரசு டி.வி.யில் வீடியோ படமாக காட்டப்பட்டது.
கேலிச்சித்திரங்கள்
ஒரு கேலிச்சித்திரத்தில், பீர் பாட்டில்களுக்கு மத்தியில் நபிகள் நாயகம் அமர்ந்திருப்பது போலவும், பின்னணியில் வெடிகுண்டு காட்சியும் இருக்கிறது. மற்றொரு கேலிச்சித்திரத்தில் நபிகள் நாயகமே பீர் குடிப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளார். இன்னொரு கேலிச்சித்திரத்தில் அவர் ஒட்டகம் போல வரையப்பட்டுள்ளார்.
போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள் பாடிக்கொண்டும், குடித்துக்கொண்டும் கேலிச்சித்திரம் வரைந்த காட்சி, வீடியோ படத்தில் இடம்பெற்றுள்ளது.
கண்டனம்
இந்த செயலுக்கு டென்மார்க் நாட்டின் மற்ற அரசியல் கட்சிகளின் இளைஞர் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளும் லிபரல் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. டேனிஷ் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் கென்னத் கிரிஸ்டன்சன் என்பவரும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இது நகைச்சுவை அல்ல. நான் சம்பவ இடத்தில் இருந்திருந்தால், இந்த போட்டியை நடத்த விட்டிருக்க மாட்டேன். மீண்டும் இப்படி நடக்கக்கூடாது’ என்று அவர் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...