ரிஎம்விபி தரப்பில் எண்மர் வீரமரணம்!! வன்னிப்புலிகள் தரப்பில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பலியானதுடன்…

Read Time:3 Minute, 26 Second

ANI.tiger.gifரிஎம்விபி தரப்பில் எண்மர் வீரமரணம்!! வன்னிப்புலிகள் தரப்பில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பலியானதுடன் அதில் 23பேரது உடலங்கள் ரிஎம்விபியினரால் கைப்பற்ப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 04.40 மணியளவில் மட்டக்களப்பில் கட்டுப்பாடற்ற பகுதியான வாகரையிலுள்ள வன்னிப்புலிகளின் நிலைகள் மீது கருணாஅம்மானின் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைத் தாக்குதல் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை சிலமணிநேரத்தில் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவினர் தமது இலக்கை அடைந்தபின் வெற்றிகரமாகத் தமது தளங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இம் மோதலில் வன்னிப்புலிகளின் தரப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 23பேரின் சடலங்கள் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளினால் கண்டெடுக்கப்பட்டது. அத்துடன் வன்னிப்புலிகளின் பெறுமதிமிக்க பல இராணுவ உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத் தாக்குதலின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்.கேணல் இசையாளன், கப்டன் யோகன், லெப்டினன் சதீஸ்கரன், லெப்டினன் சுமிந்தன், லெப்டினன் கிரி, லெப்டினன் திலீப், 2ம்லெப்டினன் மதிவாணன், வீரவேங்கை இளங்கோ ஆகிய எண்மர் தம் பெறுமதிமிக்க உயிர்களை தம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் கொடுத்து மாவீரர்களாகியுள்ளனர். (இதில் ரிஎம்விபியின் லெப்.கேணல் இசையாளன் உட்பட மூவரது வித்துடல்கள் வன்னிப்புலிகள் வசம் சிக்கியுள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவருகின்றது.) இவர்கள் நால்வர் உட்பட இன்றையதினம் வைத்தியசாலையில் மரணித்த மூவர் உட்பட மொத்தமாக ரிஎம்விபியினர் தரப்பில் எட்டுப்பேர் வீரமரணத்தை தழுவியுள்ளனர்.

வாகரைப்பகுதி மீதான தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளது. தமது இலக்கை அடைந்த பின் போராளிகள் தமது தளங்களுக்குத் திரும்பினர்.

வன்னிப்புலிகளிடம் கைப்பற்றப்பட்ட உபகரணங்களாவன சினைப்பர் – 01, டி 81 ரைபிள் -01, டி 56ரக துப்பாக்கி – 11, டி 56-2 ரக துப்பாக்கி – 02, வோக்கி டோக்கி – 05, மோட்டார் சைக்கிள் – 02, உழவியந்திரம் – 01.

இவைகுறித்த புகைப்படங்கள் விரைவில் பிரசுரிக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் 13 பேர் பலி
Next post இலங்கையிலிருந்து தமிழகம் வந்த அகதிகளின் எண்ணிக்கை 15250