சிறப்பாக நடைபெற்ற, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” இன்றைய “பொதுச்சபைக்” கூட்டம்..! (படங்கள்)
“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” உறுப்பினர்களுடனான “பொதுச்சபைக் கூட்டம்” ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில், இன்று (07.06.2020) மாலை 05.00 க்கு (17.00) புர்கடோர்ப் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர், உபதலைவர், செயலாளர், உபசெயலாளர், பொருளாளர், கணக்காய்வாளர், ஆலோசனைசபை உறுப்பினர்கள், இளைஞரணித் தலைவர், இளைஞரணி செயலாளர், ஒன்றிய உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இருந்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த கூட்டறிக்கை செயலாளரினால் வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் “தவிர்க்க முடியாத காரணங்களினால்” கலந்து கொள்ள முடியவில்லையென திரு.பன்னீர், திரு.பிரேம் ஆகியோர் எழுத்துமூலம் அறியத் தந்திருந்தனர்.
*** பொருளாளரின் நிலைப்பாடு..
அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து, முதலில் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” பொருளாளர் திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள் தனது “உடல்நிலை, வேலைப்பளு, சுகயீனம்” போன்ற காரணங்களை முன்னிட்டு தனது பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும், ஆயினும் ஒன்றிய செயல்பாட்டுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வதாகவும்” எழுத்து மூலம் அனுப்பி வைத்ததை, தலைவர் அவர்களினால் பிரஸ்தாபிக்கப்பட்டது. அக்கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மையானவர்கள் கருத்தாக “புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும் வரை, திரு.குழந்தை தொடர வேண்டுமென” தெரிவிக்கப்பட்ட போதிலும், அவரோ “தனது உடல்நிலை, வேலைப்பளு குறித்து தலைவர் ரஞ்சன் அவர்களுக்கு தெரியுமெனவும், ஆகவே தனக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” எனவும் வேண்டிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரது கோரிக்கை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
*** தலைவரின் உரை…
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள், “இக்கூட்டம் புதிய நிர்வாகசபை தெரிவுக்கான கூட்டம் என்பதை நாம் ஏற்கனவே அறிவித்துள்ளோம், ஆகவே இன்றுமுதல் தான் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதுடன், தற்போதைய நிர்வாகம் கலைக்கப்படுவதாகவும், புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யும்படியும்” கோரிக்கை வைத்தார்.
மேற்படிக் கோரிக்கை வாதப் பிரதிவாதங்களாக சிலமணிநேரம் தொடர்ந்ததைத் தொடர்ந்து அனைவராலும் “இன்று எந்தவொரு புதிய நிர்வாகத்தையும் தெரிவு செய்யக் கூடாது எனவும், மேற்படி நிர்வாகமே அடுத்த பொதுச்சபை வரை தொடர வேண்டுமெனவும், அத்துடன் இப்போதைய நிர்வாகம் தமது செயல்பாடுகளைத் தொடர்வதுக்கு உரியகாலம் வேண்டுமெனவும், ஆகவே உரியகாலம் வரை இந்த நிர்வாகமே தொடரும்” எனவும், இதேவேளை “சமூகவலைத் தளங்களில் தலைவர் உட்பட, ஒன்றியத்தை விமர்சிக்கும் எவராயினும் ஒன்றியக் கூட்டங்களில் நேரடியாக வந்தே தமது கருத்துக்களை சொல்ல வேண்டுமே தவிர, தனிப்பட்ட ரீதியில் எழுதும் எந்தவொரு எழுத்தையும் கவனத்தில் கொள்ளாமல், நாம் ஒன்றியம் ரீதியில் தொடர்ந்து செயல்பட வேண்டுமென” கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நிர்வாகசபை “நாம் தொடர்ந்து செயல்பட, புதிய பொருளாளரையும் இன்றே தெரிவு செய்ய வேண்டுமெனும்” கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
*** புதிய பொருளாளர் தெரிவு…
இதனைத் தொடர்ந்து தலைவர் அவர்களினால், “அனைவரும் ஏற்றுக் கொண்டால், அனைவரின் கருத்துக்கும் ஏற்ப, புதிய பொருளாளரை தெரிவு செய்ய வேண்டுமெனும்” கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட அனைவரின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு, அனைவராலும் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” கணக்காய்வாளாராக இருந்த திரு.சி.இலக்ஷ்மணன் அவர்களையே “புதிய பொருளாளராக” தெரிவு செய்வதெனும் முடிவு அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, திரு.சி.இலக்ஷ்மணன் அவர்களும் ஏற்றுக் கொண்டதினால் திரு.சின்னத்துரை இலக்ஷ்மணன் அவர்கள் ஏகமனதாக புதிய பொருளாளராக தெரிவு செய்யப்படடார்.
*** புதிய கணக்காய்வாளர் தெரிவு….
இதேவேளை கணக்காய்வாளராக இருந்த திரு.சின்னத்துரை இலக்ஷ்மணன் அவர்கள் புதிய பொருளாளராக தெரிவு செய்யப்பட்டதினால், கணக்காய்வாளரின் வெற்றிடத்துக்கு புதிதாக ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டுமெனும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, தலைவர் அவர்களினால், “தன்னால் கடந்த நான்கு வருடத்துக்கு மேலாக ஒன்றிய செயல்பாடுகளை சிறப்பாக நடத்த முழுக்காரணமாக இருந்த, திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்களையே தெரிவு செய்ய விரும்புவதாகவும்” தெரிவித்த கருத்து அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, திரு.குழந்தை அவர்களும் ஏற்றுக் கொண்டதினால் திரு.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) அவர்கள் புதிய “கணக்காய்வாளராக” ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை அனைவராலும் “கடந்த நான்கு வருடத்துக்கு மேலாக ஒன்றியக் கணக்குவழக்கை சரியான முறையில் சமர்ப்பித்த திரு.குழந்தை அவர்களுக்கும், இன்றைய இக்கடடான காலநிலையில் இடத்தை ஒதுக்கி, தேநீர் விருந்துபசாரம் அளித்த திரு.சுதாகரன் குடும்பத்துக்கும்” நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புங்குடுதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் “பெருக்குமர புனரமைப்பு” வேலைகளை விரைவில் முழுமையாக முடிப்பது, ஏற்கனவே கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்ப மயானங்கள் புனரமைப்பு உட்பட ஊர்நோக்கிய செயல்பாடுகளை செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டதுடன், அமைதி வணக்கத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”
இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
07.06.2020
Average Rating