வயிற்றுக் கோளாறுகளை போக்கும் இளநீர் பானம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 5 Second

கோடைகால நோய்களுக்கு இளநீர் மருந்தாகிறது. இது அனைவரும் விரும்பி குடிக்கின்ற ஒன்று. இளநீருடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவந்தால் வயிற்று வலி சரியாகும். கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தினால் உள் உறுப்புகள் செயல்பாடுகள் குறையும். சிறுநீர் சரிவர கழிக்க முடியாத நிலை, எரிச்சல், வயிற்றுபோக்கு ஆகியவை ஏற்படும். இப்பிரச்னைகளை தீர்க்கும் தன்மை இளநீருக்கு உண்டு. இளநீர் நோய் நீக்கியாக பயன்படுகிறது. கொழுப்பு சத்தை குறைக்க கூடியது.

ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது. வியர்குருவுக்கு மேல்பூச்சாக இளநீரை பயன்படுத்தலாம். இளநீரில் உள்ள வழுக்கை பகுதியை நசுக்கி மேல்பூச்சாக போடுவதன் மூலம் வியர்குரு, அம்மை, அக்கி கொப்பளங்கள் சரியாகும். கோடைகாலத்தில் ஏற்படும் வயிற்று கடுப்பு, கண் எரிச்சலுக்கான் மருந்து தயாரிக்கலாம்.இளநீரில் சிறிது துளையிட்டு அதனுள் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

மறுநாள் காலையில் இளைநீரை குடித்தால் வயிற்று கடுப்பு சரியாகும். உள் உறுப்புகளில் ஏற்படும் உஷ்ணம் குறையும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. இளநீரை பயன்படுத்தி அசிடிட்டி, நெஞ்செரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இளநீர், புதினா சாறு, சீரகப் பொடி, பனங்கற்கண்டு. இளநீருடன் சிறிது பனங்கற்கண்டு, சீரகப்பொடி சேர்க்கவும். ஒரு ஸ்பூன் புதினா சாறு சேர்த்து நன்றாக கலக்கி குடித்துவர நெஞ்செரிச்சல் படிப்படியாக குறையும்.

இதை அனைவரும் எடுத்து கொள்ளலாம். வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பால் ஏற்படும் நெஞ்செரிச்சல், வயிற்று புண், உப்புசம் சரியாகும். இளநீர் குடித்துவர வெயிலின் தாக்கம் குறையும். வயிற்று கோளாறுக்கான மருந்தாக இளநீர் விளங்குகிறது. வயிற்றை சுத்தப்படுத்தும் தன்மை இளநீருக்கு உண்டு. இளநீரை பயன்படுத்தி குளிர்பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இளநீர் வழுக்கை, பால், நாட்டு சர்க்கரை, குங்குமப்பூ.

இளநீரின் வழுக்கையை துண்டுகளாக்கி கொள்ளவும். இதில் 3 இதழ்கள் குங்குமப்பூ சிறிது நாட்டு சர்க்கரை சேர்க்கவும். குளிர்ந்த பால் ஊற்றி நன்றாக கலந்து குடித்துவர கோடைகாலத்தில் ஏற்படும் உஷ்ணத்தை குறைக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தரும். அம்மை, டைபாய்டு, சிறுநீர் கோளாறு, ரத்த அழுத்தம் குணமாகும். இந்த குளிர்பானத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். கோடைகாலத்தில் காய்ச்சல், அம்மை போன்றவை வரவாய்ப்புள்ளது. வியர்வை அதிகமாகி தோல் நோய்கள் ஏற்படும். இதற்கு இளநீர் மருந்தாகிறது. அற்புதமான பானமாக விளங்கும் இளநீரை பயன்படுத்தி கோடைகால நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பங்குச்சந்தை சக்கரவர்த்தி வாரன் பஃபெட்!! (வீடியோ)
Next post ஹார்ட்டிகல்ச்சர்!! (மகளிர் பக்கம்)