அதிகாலை எழுந்தால் மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்கலாம்! (மருத்துவம்)
‘பின் தூங்கி, முன் எழுபவள் பெண்’ என்ற முதுமொழி உண்டு. இந்த முதுமொழி நவீன காலப் பெண்களுக்கு அர்த்தமற்றதாகவும், எரிச்சல் ஊட்டுவதாகவும் இருக்கலாம். ஆனால், இங்கிலாந்தில் இந்த முதுமொழியை அடிப்படையாகக் கொண்டு, நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் ஆச்சரியகரமான முடிவைத் தந்திருக்கின்றன.
தூங்கும் பழக்கம், மார்பகப் புற்றுநோய் இவ்விரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு இந்த ஆராய்ச்சியின் மையப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்காக Mendelian randomisation வழிமுறையை ஆய்வு குழுவினர் கையாண்டனர். அதன்படி, இரவினில் நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருக்கும் வழக்கம் கொண்டுள்ள மகளிர்(Night Owls), அன்றாடம் விடியற்காலையில் எழுந்திருக்கும் பழக்கம் உடைய பெண்கள்(Early birds) ஆகியோர் ஆராய்ச்சிக்கு
உட்படுத்தப்பட்டனர்.
அதன் முடிவில் வைகறை நேரத்தில் விழித்தெழும் பழக்கம் கொண்டுள்ள பெண்களுக்கு, 40 சதவீதத்திலிருந்து 48 சதவீதம் வரை மார்பகப் புற்றுநோய் அபாயம் இல்லாதது தெரிய வந்தது. அதேவேளையில் உறக்கத்திற்கெனப் பரிந்துரைக்கப்பட்ட 7 முதல் 8 மணி நேரத்தைவிட, அதிக நேரம் தூங்கும் பெண்களும் மார்பகப் புற்றுநோய் அபாயத்துக்கு ஆளாகிறார்கள். பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை விட, அதிகமாகத் தூங்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 20% கூடுதலாக மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.
இந்த ஆய்வு குழுவினர் இம்முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘‘ஆய்வில் இருந்து பெறப்பட்ட மார்பகத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள், விடியற்காலையில் எழுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளது. இதற்கு முன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இருந்து பெறப்பட்ட முடிவுகளுடன் ஒப்பிடுகையில், எங்களுடைய ஆய்வு முடிவுகளில், ‘நைட் ஷிஃப்ட்டில் பணியாற்றும் மற்றும் இரவு நேரங்களில், விளக்கு ஒளியின் கீழ் நீண்ட நேரம் செலவிடும்
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டது’ என தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்த ஆய்வில், ஸ்காட்லாந்தில் நடைபெற்ற National Cancer Research Institute பன்னாட்டு கருத்தரங்கில் வெளியிடப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating