விலை உயர்ந்த விவாகரத்து!! (உலக செய்தி)
உலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்து அமேசான் நிறுவன ஜனாதிபதி ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து ஆகும். தனது பங்குகளில் 4 சதவீத பங்குகளை மெக்கன்சிக்கு வழங்கினார். அதன்மூலம் மெக்கென்சி இப்போது 48 பில்லியன் டொலர் சொத்துக்களைக் கொண்டு, உலகின் 4 வது பணக்கார பெண்மணி ஆக உள்ளார்.
இதேபோல், சீனாவிலும் ஒரு விலை உயர்ந்த விவகாரத்து சமீபத்தில் நடைபெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு:
சீனாவின் காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின். இவரது மனைவி யுவான். இருவரும் பிரிந்து விட்டனர்.
தற்போது டு வீமின் தனது தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்குகளை தனது முன்னாள் மனைவி யுவானுக்கு மாற்றியுள்ளார். இதன் மதிப்பு 320 கோடி அமெரிக்க டொலர் இருக்கும் என கூறப்படுகிறது.
இதை அடுத்து, மே 29 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகவலின்படி, யுவான் உலகின் பணக்காரர்களின் வரிசையில் சேர்ந்து உள்ளார்.
யுவான் சீனாவின் சர்வதேச வணிக மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். 49 வயதான யுவான் தற்போது நேரடியாக பங்குகளை வைத்திருக்கிறார்.
ஷென்சென் நகரில் வசிக்கும் டு வீமின் மே 2011 மற்றும் ஆகஸ்ட் 2018 க்கு இடையில் காங்டாயின் இயக்குநராக பணியாற்றினார். அவர் இப்போது துணை பெய்ஜிங் மின்ஹாய் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் துணை பொது மேலாளராக உள்ளார்.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு தடுப்பூசியை உருவாக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்தபோது, காங்டாய் பங்குகள் கடந்த ஆண்டில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன.
டுவின் நிகர சொத்து மதிப்பு முன்னாள் மனைவிக்கு பங்குகளை கொடுப்பதற்கு முன்பு 650 கோடி டாலர்களாக இருந்தது. தற்போது அது சுமார் 301 கோடி டாலராக குறைந்துள்ளது.
56 வயதான டு வீமின் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். கல்லூரியில் வேதியியல் படித்த பிறகு, 1987 ஆம் ஆண்டில் ஒரு கிளினிக்கில் பணிபுரியத் தொடங்கினார். 1995 ஆம் ஆண்டில் ஒரு பயோடெக் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக ஆனார். காங்டாய் 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, அதன்பின் மின்ஹாய் நிறுவனத்தை வாங்கியது, மேலும் அதன் ஒருங்கிணைந்த நிறுவனத்தின் தலைவராக டு வீமின் உள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating