கொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 13 Second

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 இலட்சத்தை எட்டியுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3 இலட்சத்து 69 ஆயிரமாக உள்ளது.

இதன்படி உலகில் இதுவரை 6,059,017 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 369,126 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதித்து உயிரிழப்போரை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இங்கு கொரோனா பாதித்து இதுவரை 103,776 பேர் பலியாகியுள்ளனர்.

அடுத்த இடத்தில் பிரிட்டன் (38,458), இத்தாலி (33,340), பிரேசில் (28,834), பிரான்ஸ் (28,774), ஸ்பெயின் (27,125) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதேவேளை, இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 181,827 ஆக உள்ளது. அதே சமயம், பலி எண்ணிக்கை 5,185 ஆக உள்ளது. இதனால் உலகளவில் பலி எண்ணிக்கையில் இந்தியா 13 வது இடத்தில் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு!! (உலக செய்தி)
Next post உணவுக்கு ஒரு திட்டம்!! (மருத்துவம்)