ஹஸ்பண்ட் டே கேர்!! (மகளிர் பக்கம்)
பெண்கள் பலரும் ஷாப்பிங் என்றால் குஷியாகிவிடுவோம். என்னதான் ஆன்லைன் ஷாப்பிங் விதவிதமாக வந்தாலும், கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது தனி சந்தோஷம் தான். அதற்காக பல மணி நேரம் செலவு செய்து, நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் பார்த்து பார்த்து ஷாப்பிங் செய்வோம். பண்டிகை காலம் வந்தால் சொல்லவே தேவையில்லை, கடைகள் அனைத்தும் சலுகைகளும் இலவசமும் அறிவித்து, நம்மை மயக்கிவிடுகின்றனர். அந்த சமயங்களில் வீட்டில் சமையல் கூட செய்யாமல், குடும்பமாக கிளம்பி ஷாப்பிங் செல்வது வழக்கமாகி விட்டது.
இப்படி குடும்பமாக செல்லும் போது, பெண்கள் பல அடுக்கு மாடி கட்டிடமாக இருந்தாலும், உற்சாகமாக ஷாப்பிங் செய்வார்கள். தலைக்கு குத்தும் சின்ன கிளிப் முதல் காலுக்கு அணியும் செருப்பு வரை உள்ள அனைத்து பொருட்களையும் வாங்கவில்லை என்றாலும் அந்தந்த தளத்திற்கு சென்று ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும். அப்போது தான் திருப்தி அடைவார்கள். ஆனால் ஆண்களை பொறுத்தவரை ஒரு இரண்டு மாடி ஏறியவுடனோ அல்லது அவர்களுக்கான பொருட்களை வாங்கி பிறகு சோர்வடைந்துவிடுவார்கள்.
இவர்களுக்காகவே ஒவ்வொரு தளத்திலும் கடை நிர்வாகம் இவர்கள் உட்கார சோபா மற்றும் சாப்பிட உணவகமும் அமைத்துள்ளது. இருந்தும், பெண்கள் அவர்களின் பொறுமையை கொஞ்சம் அதிகமாகவே தான் சோதிக்கிறார்கள். இனி ஆண்கள் யாரும் காத்திருக்க வேண்டாம். தென் ஆப்ரிக்கா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்துள்ளனர். அதுதான் இந்த “ஹஸ்பண்ட் டே கேர்.” இங்கு அடுக்கு மாடி போல் அங்கு மால்கள் தான் நிறைந்து இருக்கும். அவ்வாறு மால்களில் ஷாப்பிங் செல்லும் போது, சில நேரம் ஒன்றாக பொருட்கள் வாங்கிவிட்டு, ஆண்கள் போர் அடிக்குது என்ற தொந்தரவு செய்ய தொடங்கினால், அவர்களை இந்த “ஹஸ்பண்ட் டே கேர்”ல் காத்திருக்க வைக்கலாம்.
குழந்தைகளின் டே கேரில் விளை யாட்டு அம்சங்கள் இருப்பது போல, ஆண்களுக்கான கேளிக்கை அம்சங்களை இங்கு நிரப்பியுள்ளனர். இந்த சென்டரில், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். சோபாவில் அமர்ந்தபடி டிவியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு நேரம் போக்கலாம். புத்தகம் படிக்கலாம். இங்கே காத்திருக்கும் நேரம் இலவசம் தான். உணவிற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். முதன் முதலில் தென் ஆப்ரிக்காவின் கேப் டவுனில் ஆரம்பமாகி, சீனா, தாய்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபலமடைந்திருக்கிறது இந்த டேகேர்.
இதனை தொடர்ந்து பல உணவகங்கள், இந்த ‘தீம்’-மை பின்பற்றி வருகின்றன. “தனியாக உங்களுக்கு பிடித்ததைச் செய்ய வேண்டுமா? ஓய்வெடுக்க வேண்டுமா? நிம்மதியாக ஷாப்பிங் செல்ல வேண்டுமா? உங்கள் கணவரை இங்கே விட்டுச் செல்லுங்கள். நாங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்கிறோம். அவரின் உணவிற்கு மட்டும் பணம் கட்டினால் போதும்” போன்ற வாசகங்கள் ஏந்திய பலகைகள் உணவு விடுதிகளின் வாசலில் பிரகாசிக்க ஆரம்பித்து விட்டன.
தென்ஆப்ரிக்காவின் கேப் டவுனில் சுற்றுலா பயணிகள் அதிகம் இருக்கும் இடத்தில், 1907ல் இது முதலில் தொடங்கப்பட்டது. அங்கே ஆண்கள் பொழுதுபோக்குக்காக பல அம்சங்கள் உள்ளது. பல டிவிகள் வைக்கப்பட்டு, இசைக் கலைஞர்கள் கொண்ட இசைக்குழுவும் உள்ளது. மேலும் பல விதமான உணவு வகைகளும், மதுபான வகைகளும் இங் குண்டு. வாடிக்கையாளர்கள் சுமார் 2 மணி நேரம் தங்கலாம். 2004ல், இதற்கு கிடைத்த அதீத வரவேற்பால்,
இந்த உணவகம் விரிவடைந்து இப்போது ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு வாடிக்கையாளர்களை தினமும் வரவேற்கிறது. பெண்களுக்கு சமமாக ஆண்களும் இப் போது அதிகம் ஷாப்பிங் செய்கின்றனர். தங்கள் உடைகளில் அக்கறை செலுத்து கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, ஆண்கள் அதிகம் ஷாப்பிங் செய்திருப்பதாக கருத்துகள் வெளியாகியுள்ளது. வாடிக்கை யாளர்களை ஈர்க்க உணவகங்கள் தினமும் பல யுக்திகள் கையாண்டு வருகின்றன. இதுவும் அதுபோல மக்களை கவர ஒரு புதிய யுக்திதான்.
Average Rating