கதவைத் தட்டும் ஹில்மி அஹமட்: காசு பெறாத சுமந்திரன் !! (கட்டுரை)

Read Time:5 Minute, 16 Second

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராகவும் அவ்வாறு மரணிப்பவர்களின் உடல்களை, அடக்கம் செய்வதற்கான உரிமையை அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரியும், உயர்நீதிமன்றில் ஹில்மி அஹமட் என்பவர், அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அக்குரணையைப் பிறந்தகமாகக் கொண்ட இவர், ‘யங் ஏசியா’ எனும் ஊடக நிறுவனமொன்றை நீண்ட காலமாக நடத்தி வந்தவர்; சமூக ஆர்வலர்.

தனது சமூகத்துக்கு எதிராக நடக்கும் மேற்படி அநீதியைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில், தனி நபராகக் குறித்த அடிப்படை உரிமை மனுவை, அவர் தாக்கல் செய்திருக்கிறார்.
அவருடன் நாம் பேசினோம்.

“தனி நபராகவே, இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளேன். கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, அடக்கம் செய்வதற்காகக் கையளிக்க வேண்டும் என, அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருக்கின்றேன்” என்றார்.

தான், மேற்கொண்டுள்ள இந்தச் செயற்பாட்டுக்காக, எந்தவோர் அரசியல்வாதியும் எதுவித உதவிகளையும் தனக்கு வழங்கவில்லை என்பதையும், ஹில்மி அஹமட் உறுதிபடத் தெரிவித்தார்.

சுமந்திரனின் பேருதவி
“இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்காகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். இந்த வழக்கில், அவர் ஆஜரானால் அதற்காகச் சிறியதொரு பணத் தொகையை வழங்கும் எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், கொடுப்பனவு குறித்து நான் பேசுவதற்கு முன்பாகவே, இந்த வழக்கில், தான் எதுவித ஊதியத்தையும் பெறாமல் இலவசமாக ஆஜராவதாக, சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் கூறினார்” என்றார் ஹில்மி.

“சுமந்திரன் அவர்களின் இந்த உதவி, மிகப் பெறுமதியானதாகும். மேலும், இந்த வழக்கில், தன்னுடன் ஆஜராகும் தனது உதவியாளர்களான சட்டத்தரணிகளுக்கும் எதுவித கொடுப்பனவுகளையும் வழங்கத் தேவையில்லை என்றும் சுமந்திரன் என்னிடம் கூறியிருக்கிறார்” எனவும் ஹில்மி அஹமட் தெரிவித்தார்.

ஹில்மியின் உறுதி
கொரோனா வைரஸால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான சட்ட அனுமதியைப் பெறுவதற்காக, நீதிமன்றின் கதவுகளைத் தட்டிப் பார்த்தே ஆக வேண்டும் என்பதில் ஹில்மி அஹமட் மிகவும் உறுதியாக இருக்கின்றார்.

இந்தச் செயற்பாட்டில் அவரை உற்சாகமிழக்கச் செய்யும் வகையில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரால், அவருக்குக் கூறப்பட்ட ‘ஆலோசனை’கள் எவற்றையும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்பதை, அவருடன் பேசும் போது புரிந்துகொள்ள முடிந்தது.

ஹில்மி அஹமட் எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது, முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்குத் தற்போது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

‘ஹில்மி அஹமட் எனும் ஒரு தனிநபர், தனது சமூகத்தின் உரிமைக்காக நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனு மீதான வழக்கில், சகோதர சமூகத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், எவ்வித கட்டணங்களையும் பெறாமல், ஆஜராகுவதற்குச் சம்மதித்திருக்கிறார். ஆனால், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று, வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நீங்களெல்லாம் வாய்மூடிக் கிடக்கிறீர்களே, வெட்கமில்லையா உங்களுக்கு’ என்று கேட்டு, முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது, முஸ்லிம் சமூகம் காறி உமிழும் நிலையொன்றும் ஏற்படலாம்.

அதிலிருந்து தப்பிப்பதற்காகச் சிலவேளை, முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில், நீதிமன்றத்தை எதிர்வரும் நாள்களில் நாடக் கூடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூமியை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய 15 வியக்கவைக்கும் உண்மைகள்! (வீடியோ)
Next post உன்னைப் பற்றி தெரிந்துகொள்…!! (மகளிர் பக்கம்)