வாகரைப்பகுதி வன்னிப்புலிகளின் நிலைகள்மீது TMVP முற்றுகைத் தாக்குதல்

Read Time:3 Minute, 0 Second

ANI.smileys_wichtig.gifTMVP.vaharai.jpgவாகரைப்பகுதி வன்னிப்புலிகளின் நிலைகள்மீது முற்றுகைத் தாக்குதல் வன்னிப்புலிகளின் தரப்பில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பலி இன்று அதிகாலை 04.40 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கட்டுப்பாடற்ற பகுதியான வாகரை, பனிச்சங்கேணிப் பகுதிகளிலுள்ள வன்னிப்புலிகளின் நிலைகள் மீது தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவினரால் பலமுனைகளில் ஏக காலத்தில் கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே கடும் சமர் மூண்டது. சிலமணிநேரம் நீடித்த இச்சமரில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலுக்கு நீண்டநேரம் தாக்குப்பிடிக்க வன்னிப்புலிகளால் முடியவில்லை.

அவர்கள் தமது நிலைகளைக் கைவிட்டுவிட்டு காட்டுப் பகுதிக்குள் தப்பிச்செல்ல முன்னேறிச் சென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவினரால் அப்பகுதிகள் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நண்பகல் வேளையில் பின்வாங்கிச் சென்ற வன்னிப்புலிகள் தமது ஏனைய வளங்களையும் ஒன்றுதிரட்டிக் கொண்டு இழந்த தமது பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன் ஒரு இராணுவ நகர்வை ஆரம்பித்தனர்.

ஆனாலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவின் அழுத்தமான தாக்குதலினால் இம்முயற்சியும் வெற்றியளிக்காததுடன் அவர்கள் பலத்த இழப்புடன் மீண்டும் பின்வாங்க நேரிட்டது.

இன்று அதிகாலை தொடுக்கப்பட்ட இத்தாக்குதலில்; வன்னிப்புலிகளின் தரப்பில் 50ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், இதில் 23பேரின் சடலங்கள் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவினரால் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பெறுமதிமிக்க பல இராணுவ உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இம்மோதலில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் தரப்பில் ஐந்து போராளிகள் வீரமரணம் அடைந்து தங்களது உயிர்களை தம் மக்களின் விடுதலைக்கு வித்தாக்கியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் தொடரும்…..

TMVP.vaharai.jpg
TMVP.vaharai2.jpg
TMVP.vaharai3.jpg
TMVP.vaharai4.jpg
TMVP.vaharai1.jpg

Thanks…WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாய்லாந்து வேட்பாளர் ராஜினாமா -ஐ.நா.பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில்
Next post காவல்துறை உத்தியோகத்தர் கிரேனேட்டுடன் கைது