50 நாளுக்கு பின் தொடங்கிய ரயில் போக்குவரத்து!! (உலக செய்தி)
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாத இறுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்ல கடந்த 1 ஆம் திகதியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வழக்கமான ரயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் வகையில் நேற்று முதல் குறிப்பிட்ட நகரங்களுக்கு ரயில்கள் இயங்கின. இதனால் 50 நாட்களுக்கு பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியது.
புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு 1,122 பயணிகளுடன் மாலை 4.45 மணிக்கு ரெயில் புறப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு மாலை 5.30 மணிக்கு ஒரு புறப்பட்டது. அதில், 1,177 பயணிகள் சென்றனர். இரவு 9.15 மணிக்கு பெங்களூருவுக்கு ஒரு ரெயில் புறப்பட்டது. அதில், 1,162 பயணிகள் சென்றனர். ஆக மொத்தம், டெல்லியில் இருந்து 3 ஆயிரத்து 461 பயணிகள் புறப்பட்டுள்ளனர்.
இதுபோல், மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா, பீகார் மாநிலம் ராஜேந்திர நகர், பெங்களூரு, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து டெல்லிக்கு 5 ரெயில்கள் புறப்பட்டன.
உறுதி செய்யப்பட்ட ஆன்லைன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் நுழைய வேண்டும் என்று ஏற்கனவே ரயில்வே துறை அறிவித்திருந்தது. அதன்படி, டிக்கெட்டை பரிசோதித்த பிறகே பயணிகளை உள்ளே அனுமதித்தனர்.
உடல் வெப்ப பரிசோதனைக்காக ரெயில் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரம் முன்பே பயணிகள் வந்தனர். ஒரு நுழைவாயில் வழியாக மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
நுழைவாயிலில் கிருமிநாசினி எந்திரம் பொருத்தப்பட்டு இருந்தது. அதில் கையை கழுவிய பிறகே நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டும் ரெயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
குறிப்பிட்ட பணி காரணமாக வெளியூர் சென்றபோது, அங்கு சிக்கிக் கொண்டவர்கள், 50 நாட்களுக்கு பிறகு தங்கள் குடும்பத்தினரை சந்திக்க சொந்த ஊர் செல்லும் ஆவலில் உற்சாகமாக பயணித்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating