மகிழ்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டு!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 39 Second

உணவுக்கும் மனநல ஆரோக்கியத்துக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. இதனை மனச்சோர்விலும் வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படும் தாக்கத்திலும் உதாரணமாகக் கொண்டு உறுதிப்படுத்த முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத் பத்ரா. ஒரு நபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவர் தன் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.

வாழைப்பழம் எப்பவுமே பெஸ்ட்

மூளையில் சுரக்கும் செரோடோனின்(Serotonin) அளவு குறைவது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். வாழைப்பழங்களில் Tryptophan என்கிற அமினோ அமிலம் நிறைவாக உள்ளது. இதுவே செரோடோனின் என்கிற மோனோ அமைன் நரம்பியல் கடத்தியாக (Monoamine neurotransmitter) மாற்றப்படுகிறது. இந்த செரோடோனின் நமது நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சி போன்ற உணர்வுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வாழைப்பழங்களை சாப்பிடுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

மீன் எண்ணெயில் Omega-3 polyunsaturated fatty acids (PUFA) இருப்பதாகவும், இந்த கொழுப்பு அமிலமானது மனச்சோர்வினை எதிர்த்துப் போராடும் விளைவுகளைத் தூண்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சைவ உணவு உண்பவர்கள் இந்த கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள Algae plant oil-ஐப் பயன்படுத்தலாம். இது மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மெக்னீசியம் நிறைந்த பயறுகள்

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை சாப்பிட்ட குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு முழுமையான ஆற்றலைப் பெற்றதுபோல நீங்கள் உணரலாம். அதுபோல உங்களுடைய மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றைக் கையாளுவதற்கு மெக்னீசியம் தேவைப்படுகிறது. மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து உங்கள் குடலுக்குள் இருக்கும் காரவகை(Alkaline) உணவு மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இந்த குடல் ஆரோக்கியம் ஒருவரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

அஸ்வகந்தாவும் பிராமியும்

இந்திய ஜின்ஸெங் அல்லது குளிர்கால செர்ரி என்று அழைக்கப்படுகிற அஸ்வகந்தா(Ashwagandha), பிராமி(Brahmi) ஆகியவை மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவும் மருத்துவப் பண்புகளைக் கொண்டிருக்கிறது. அஸ்வகந்தா மற்றும் பிராமி போன்றவற்றை கொழுப்புச் சத்துள்ள பொருட்களான பால், தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யில் கலந்து சாப்பிடலாம். Lactose intolerance பிரச்னை இருப்பவர்கள் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். அஸ்வகந்தாவின் வேர் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை சமாளிக்க உதவுவதோடு, மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவை உயர்த்துவதன் மூலம் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நட்ஸ் ஸ்பெஷல்

பூசணி விதைகள், முந்திரி, வேர்க்கடலை போன்ற பிற கொட்டை வகைகள், விதைகள் மற்றும் பயறு வகைகளில் மெக்னீசியம் சத்து நிறைவாக உள்ளது. இச்சத்து தசைகள் தளர்வடைய உதவுவதோடு மனநிலையையும் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலமாக மனநல ஆரோக்கியம் மேம்படுகிறது.

உணவினை தேர்ந்தெடுங்கள்

மனச்சோர்வுக்கு அடிப்படையாக பல காரணங்கள் இருக்கலாம். தைராய்டு பிரச்னை உடையவர்களுக்கும் மனச்சோர்வு ஏற்படலாம். இதுபோன்று மனச்சோர்வுக்கான காரணங்கள் வேறுபடலாம். எனவே, அதற்குரிய காரணங்களை அறிந்து கொள்வதன் மூலம் அதற்கேற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுக்கலாம். பால் மற்றும் தயிர் போன்ற பால் சார்ந்த பொருட்களில் அதிக அளவு இருக்கும் அயோடின் சத்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை வெல்ல உதவுகிறது. மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் உணவுப் பொருட்களை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணரும் சுகாதார பயிற்சியாளருமான Tapasys Mundhra.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் ! (வீடியோ)
Next post கொரோனாவால் அழியும் அபாயத்தில் அமேசான் பழங்குடியினர் !! (உலக செய்தி)