சரும சுருக்கம் நீக்கும் சக்கரவர்த்தி!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 17 Second

கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை மட்டுமில்லாமல், எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது சக்கரவர்த்தி கீரை

* சக்கரவர்த்தி கீரையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து மிகுந்து உள்ளது. இக்கீரை சரிவிகித உணவாகிறது.

* ரத்த சோகை சரியாவதுடன், மலச்சிக்கல் மறைகிறது. வயிற்றுப்புண்ணை சரி செய்யும் தன்மை சக்கரவர்த்தி கீரைக்கு உண்டு.

* புற்றுநோயை தடுக்கவல்ல இந்த கீரை, எலும்பை பலமடையச் செய்கிறது. சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.

* ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரை இலையை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் சேர்த்து நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதன் மூலம், ரத்தசோகை குணமாகும். மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

* சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து பசையாக்கி மேல்பூச்சாக பூசி வர, வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும். சிராய்ப்பு காயங்கள் ஆறும்.

* ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் உடன் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். இளஞ்சூட்டுடன் மூட்டுவலி உள்ள இடத்தில் சக்கரவர்த்தி கீரையை கட்டி வைத்தால் வலி குறையும். வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்தாலும் வலி மறையும்.

* சிறுநீரகக் கற்கள், தொற்றுக்களை போக்கக் கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கக்கூடியது இக்கீரை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களும் கோலம் போடலாம்! (மகளிர் பக்கம்)
Next post இதுவரை நீங்கள் பார்த்திராத வெறித்தனமான விலங்குகள்!!(வீடியோ)