இன்றைய தேவை பொது தேசிய கொள்கையை வகுப்பதே

Read Time:2 Minute, 36 Second

ANI.Flower.1.gifதேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடங்களில் அரசாங்கமும் ஐக்கிய தேசியக் கட்சியும் பொது இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளதாகவும் இதன் மூலம் நாட்டு மக்கள் புதிய அரசியல் கலாச்சாரமொன்றைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்தார். வெளிநாடு சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் உயர்மட்டக் குழுவின் தீhமானத்திற்கிணங்க ஐக்கிய தேசிய கட்சி தமது அங்கீகாரத்தை வழங்கவுள்ளது.

அரச தரப்பிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதுடன் பொது வேலைத் திட்டங்களுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

பொது இணக்கப்பாட்டுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக இருதரப்பினருக்குமிடையில் நேற்று காணப்பட்ட இணக்கப்பாட்டையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி நேற்று மாலை செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, எம்.பிக்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சஜீத் பிரேமதாச ஆகியோரும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

தறபோதைய இணக்கப்பாட்டின் மூலம் கடந்த அரைநு}ற்றாண்டு காலமாக இடம்பெற்று வந்த வைராக்கியம் நிறைந்த அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்பள்ளி வைக்கப்பட்டு, நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாச்சாரமொன்றைக் கட்டியெழுப்ப முடியுமென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இம்மாதம் 28 மற்றும் 29 இல் பேச்சு நடத்த இரு தரப்பும் உடன்பாடு
Next post மைக்கேல் ஜாக்சனை ரகசியமாக படம் பிடித்த விமான கம்பெனி அதிபருக்கு 6 மாதம் ஜெயில்