35 லட்சம் பேருக்கு கொரோனா – 247,470 பேர் உயிரிழப்பு!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 25 Second

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 3,506,729 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 2,127,043 சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 50,739 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பரவியவர்களில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரஸூக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 47 ஆயிரத்து 470 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 67,448
ஸ்பெயின் – 25,100
இத்தாலி – 28,710
இங்கிலாந்து – 28,131
பிரான்ஸ் – 24,760
ஜெர்மனி – 6,812
ரஷியா – 1,280
துருக்கி – 3,336
ஈரான் – 6,203
பிரேசில் – 6,761
சீனா – 4,633
கனடா – 3,566
பெல்ஜியம் – 7,844
பெரு – 1,200
நெதர்லாந்து – 4,987
இந்தியா – 1,301
சுவிட்சர்லாந்து – 1,762
ஈக்வடார் – 1,371
போர்ச்சீகல் – 1,023
மெக்சிகோ – 2,061
ஸ்வீடன் – 2,669
அயர்லாந்து – 1,286

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அக்னி நட்சத்திரம் இன்று – வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!! (உலக செய்தி)