கொரோனா பரவலை கட்டுப்படுத்த குளிர் சாதனங்களை கட்டுக்குள் வையுங்கள்!! (உலக செய்தி)

Read Time:3 Minute, 33 Second

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள குளிர்சாதனங்களை (ஏ.சி.) கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது கோடைகாலம் என்று வழக்கமாக சொல்வது உண்டு. ஆனால் இப்போது இது கொரோனா காலம் என்று சொல்லும் நிலை வந்துள்ளது.

கோடை காலம் என்றாலே எல்லோரும் குளிர்சாதனங்களை (ஏ.சி. எந்திரங்கள்) இயக்கி, சில்லென்ற குளிரில் நமது உடலை வைத்துக்கொள்ளத்தான் விரும்புவோம்.

ஆனால் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், ஒவ்வொருவரும் வீடுகளில் உள்ள ஏ.சி. எந்திரங்களை 24 முதல் 30 டிகிரி என்ற அளவில் (இது இயல்பான குளிர்நிலையை மட்டும் தரும்) கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதேபோன்று ஈரப்பதத்தின் அளவையும் 40 முதல் 70 சதவீதத்துக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுரைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “சில்லென்றிருக்கிற கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க பீஜிங் முதல் வாஷிங்டன் வரை, மிலன் முதல் டெல்லி வரை, பாரீஸ் முதல் மும்பை வரை தற்போது எல்லோருமே அதிக வெப்பம், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் என்பதை நம்புகிற நிலைதான் உள்ளது. விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாவிட்டாலும் கூட சமூகத்தில் இப்படி கருத்து நிலவுகிறது. கோடைகாலத்தில் கொரோனா வைரஸ் சரண் அடையக்கூடும்” என குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 16-ந் திகதி வெளியான ஒரு அறிக்கையில், “பூமி வெப்பம் அடைகிறது என்று யார் கூறுகிறார்கள்? குறைந்தபட்சம் உலக சுகாதார நிறுவனம் அல்ல. தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், அதிகளவு வெப்பம் இருக்க வேண்டும் என்பதுதான் மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறது” என கூறப்பட்டிருந்தது.

இதில் என்ன சுவாரசியமான அம்சம் என்றால், அதற்கு மறுநாளில் (மார்ச் 17-ந் திகதி) மராட்டிய மாநிலம் புனேயில் கண்டறியப்பட்ட ஆய்வு முடிவு, “சார்ஸ், மெர்ஸ் வைரஸ்களுக்கு பிறகு மிக மோசமான மூன்றாவது வைரஸ் கொரோனா வைரஸ்தான். இது மிகவும் சூடான மற்றும் ஈரப்பதமான வானிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் நமக்கு பாதுகாப்புக் கவசம்? (அவ்வப்போது கிளாமர்)
Next post ஊரடங்கு – 70 லட்சம் கர்ப்பங்கள் உருவாகும் – ஐ.நா தகவல்!! (உலக செய்தி)