சர்க்கரை நோய் இருப்பவர்கள் பேலியோ டயட் எடுக்கலாமா? (மருத்துவம்)

Read Time:3 Minute, 1 Second

தாராளமாக எடுக்கலாம். பேலியோவில் உங்கள் சுகர் அளவுகள் ஏறவே ஏறாது என்பதால் வழக்கமான தானிய உணவுக்கு போடும் அளவு இன்சுலின் ஊசி, மாத்திரை போட்டால் லோ சுகர் அபாயம் ஏற்படலாம். ஆகவே, பேலியோ எடுக்கும் முதல் நாளே இன்சுலின் ஊசி அளவை குறைக்கும் நிலை அல்லது சுத்தமாக நிறுத்தக்கூடிய இனிய திருப்பத்தை நீங்கள் சந்திப்பீர்கள். சுகர் அளவுகளை தொடர்ந்து மானிட்டர் செய்து இன்சுலின் ஊசி அளவை குறைத்து வரவேண்டும்.

பேலியோ டயட்டின் பின்விளைவுகள் என்னென்ன?

முதலில் சில நாட்கள் தலைவலி, களைப்பு போன்றவை இருக்கும். நீர் அதிகமாக பருகி இதை சமாளிக்கலாம். அதன்பின் சரியாகிவிடும். ஆரம்பத்தில் உடற்பயிற்சி வேண்டாம்.

பேலியோவில் துவக்கநிலை தவறுகள் எவை?

பட்டினி கிடத்தல். இது தயவுசெய்து வேண்டவே வேண்டாம். வயிறு நிரம்ப சாப்பிடவும்.குறைந்த காலரி உண்ணுதலும் வேண்டாம்.கொழுப்பை சாப்பிட பயப்படாதீர்கள். முட்டையின் மஞ்சள் கரு, சிவப்பிறைச்சி ஆகியவையே உங்கள் எரிபொருள். இதை பயமின்றி உண்ணவும்.

பேலியோ டயட் எடுத்தவர்கள் இடையில் பிரேக் எடுத்துக் கொள்ளலாமா?

துவக்கத்தில் மாதம் ஒரு நாள் மட்டுமே பிரேக் எடுக்கலாம். அன்றும் கூட ஜங்க் ஃபுட், எண்ணெயில் பொரித்த உணவுகள், ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிடவேண்டாம். ஒரு மாதம் பேலியோவில் இருந்து குப்பை உணவை ஒரே ஒரு நாள் உண்டாலும் வயிறு கடுமையான ரியாக்‌ஷன் காட்டும். விரும்பினால் அன்று அரிசி, இட்லி, பழங்கள் முதலியவற்றை உண்டுக் கொள்ளலாம். இனிப்பு, துரித உணவகம், நூடுல்ஸ் பக்கம் தயவுசெய்து போகவே வேண்டாம்.

பேலியோ டயட்டில் இருப்பவர்கள் எம்மாதிரி உடற்பயிற்சி செய்யவேண்டும்?

30- 45 நிமிட மெதுநடை, ஜிம்முக்கு சென்று பளுதூக்குவது, சைக்கிளிங், கிரிக்கெட் மாதிரி விளையாட்டுகள் போதும். ஓடுதல், ஜாக்கிங் உள்ளிட்ட கடும் பயிற்சிகள் அவசியமில்லை.

சோரியாசிஸ், ஹைப்போதைராடிசம், பிகாட் மாதிரி வியாதிகள் உள்ளவர்களும் பேலியோ பின்பற்றலாமா?

செய்யலாம். இதற்கான தனி டயட்டுகள் உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா? (அவ்வப்போது கிளாமர்)
Next post கெட் செட் குக் !! (மகளிர் பக்கம்)