பிரான்சில் மே மாதம் வரை ஊரடங்கு நீட்டிப்பு !! (உலக செய்தி)

Read Time:2 Minute, 8 Second

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 19 லட்சத்து 22 ஆயிரத்து 926 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 568 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

ஐரோப்பிய நாட்டான பிரான்சில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 779 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 ஆயிரத்து 967 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு அடுத்த மாதம் (மே மாதம்) 11 ஆம் திகதி வரை நீட்டித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் உத்தரவிட்டுள்ளார்.

பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான எல்லைகளும் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து மூடியே இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ´´மே 11 ஆம் திகதி புதிய கட்டம் தொடங்கும். அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும் எனவும் அப்போதைய நிலைமையின் அடிப்படையில் விதிமுறைகள் வகுக்கப்படும்´´ என அதிபர் இம்மானுவேல் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்த நடவடிக்கை!! (உலக செய்தி)
Next post கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா? (அவ்வப்போது கிளாமர்)