லஞ்சம் கொடுக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதல் இடம்
வெளிநாட்டு வர்த்தகத்தை பிடிப்பதற்காக ஒவ்வொரு கம்பெனிகளும்,லஞ்சம் கொடுப்பது உண்டு. இதில் இந்தியா முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கும் கம்பெனிகள், வெளிநாட்டு வர்த்தகத்தை அதிக அளவில் பெறுவதற்காக அந்த நாடுகளில் உள்ள கம்பெனிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஏராளமாக லஞ்சம் கொடுத்து ஆர்டர்களை பிடிப்பது உண்டு. ஜெர்மனியில் இருக்கும் டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு, உலகில் உள்ள 30 நாடுகளில், எந்த நாட்டில் இருக்கும் கம்பெனிகள் அதிக அளவில் லஞ்சம் கொடுத்து வியாபாரத்தை பெருக்குகின்றன என்ற கருத்துகணிப்பை நடத்தியது. லஞ்சமே கொடுக்காத நாடுகளுக்கு 10 மதிப்பெண் என்ற அளவில் கருத்துகணிப்பு நடைபெற்றது. உலகில் எந்த நாடும் இந்த 10 மதிப்பெண்ணை பெறவில்லை.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கம்பெனிகள் தான் மிக குறைந்த அளவில் லஞ்சம் கொடுக்கின்றன என்று இந்த ஆய்வில் தெரியவந்து இருக்கிறது. இந்த நாட்டுக்கு 7.81 மதிப்பெண்கள் கிடைத்தது.
லஞ்சம் கொடுக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாதான் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. அதாவது, கருத்துகணிப்பு மார்க் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்தியாவுக்கு 4.62 மதிப்பெண்கள் கிடைத்தன.
லஞ்சம் கொடுப்பது தொடர்பாக ஒவ்வொரு நாட்டுக்கும் கிடைத்த மதிப்பெண் வருமாறு:-
1. சுவிட்சர்லாந்து-7.81
2. சுவீடன்-7.62
3. ஆஸ்திரேலியா-7.59
4. ஆஸ்திரியா-7.50
5. கனடா-7.46
6. இங்கிலாந்து-7.39
7. ஜெர்மனி-7.34
8. நெதர்லந்து-7.28
9. பெல்ஜியம்-7.22
10. அமெரிக்கா-7.22
11. ஜப்பான்-7.10
12. சிங்கப்பூர்-6.78
13. ஸ்பெயின்-6.63
14. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-6.62
15. பிரான்ஸ்-6.50
16. போர்ச்சுகல்-6.47
17. மெக்சிகோ-6,45
18. ஆங்காங்-6.01
19. இஸ்ரேல்-6.01
20. இத்தாலி-5.94
21. தென்கொரியா-5.83
22. சவூதி அரேபியா-5.75
23. பிரேசில்-5.65
24. தென் ஆப்பிரிக்கா-5.61
25. மலேசியா-5.59
26. தைவான்-5.41
27. துருக்கி-5.23
28. ரஷியா-5.16
29. சீனா-4.94
30. இந்தியா-4.62
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...