குழந்தைகளும் செய்யலாம் வீராசனம்!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 44 Second

பெயரிலேயே வீரத்தைக்கொண்ட இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்தால், பயம், தயக்கம் நீங்கி மனதில் வீரம் உணடாகும். இது மிக எளிமையான ஆசனம்தான். வீராசனத்தைச் செய்யும் முறையை விளக்குகிறார். விரிப்பின் மீது வஜ்ராசனத்தில் உட்கார்ந்துகொள்ளவும். கண்களை மூடியபடி இரு கைகளையும் உடலுக்குப் பக்கவாட்டில் நீட்டி, அப்படியே தலைக்கு மேலே உயர்த்தி, விரல்களைக் கோத்துக்கொள்ளவும்.

உள்ளங்கைகள் மேல்நோக்கி இருக்கும்படி கைகளைத் திருப்பி விரித்துவைத்து அப்படியே ஐந்து எண்ணிக்கை வரை இருக்கவும்.
பிறகு இரு கைகளையும் உள்பக்கமாகத் திருப்பி முதலில் மேலே கொண்டுசென்றது போலவே, உடலுக்குப் பக்கவாட்டில் மெதுவாக கீழே கொண்டுவரவும். குழந்தைகள் செய்யக்கூடிய வகையில் எளிதான முறையில் விவரிக்கப்படுகிறது.

பயன்கள்

1. மனதில் தைரியம் உண்டாகும். முதுகுத்தண்டு வலுப்பெறும்
2. நுரையீரல் பலம் பெறும்
3. அஜீரணத்தைப் போக்கும்
4. தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற தசையைப் போக்கும்.
5. பாதங்களில் உண்டாகும் வலி, மூட்டுவலி போன்றவை சரியாகும்.
6. கழுத்து வலி, வயிற்றுநோய் ஆகியவை குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுலைமானியை ஏன் கொன்றது அமெரிக்கா? (வீடியோ)
Next post அழகுக்கு அழகு சேர்க்க !! (மகளிர் பக்கம்)