ரஷ்யாவில் மட்டும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது எப்படி? (உலக செய்தி)

Read Time:7 Minute, 54 Second

உலக நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட நாடு என முதலாவது இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது ஐக்கிய அரபு அமீரகம். இரண்டாவது இடத்தில் இருப்பது ரஷ்யா.

ரஷ்யா, இப்படி இரண்டாவது இடத்தில் இருப்பது ஆச்சரியப்பட வைப்பதற்கு அர்த்தமுள்ள காரணங்கள் பல உண்டு.

1. ரஷ்யாவின் மக்கள் தொகை 14 கோடியே 67 லட்சம்.

2. உலகுக்கே கொரோனா வைரசை வினியோகித்து இருக்கிற சீனாவுடன் 4,209.3 கி.மீ. பரப்பிலான நீண்ட எல்லையை கொண்டுள்ளது. உலகிலேயே 6-வது நீள எல்லை இதுதான்.

3. அதுமட்டுமல்ல கொரோனா ஆதிக்கம் செலுத்தி வந்த சீனா, நேர்வே உள்ளிட்ட 14 நாடுகளுடன் ரஷ்யாவின் எல்லை பரந்து விரிந்திருக்கிறது.

4. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நேரம்தான். ஆனால் ரஷ்யாவில் 9 நேர மண்டலங்கள் உள்ளன. அதாவது, 9 இடங்களில் வெவ்வேறு நேரம் காட்டும்.

இப்படி காரணங்கள் நீளுகின்றன.

ஆனாலும் ரஷ்யாவில் கொரோனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடைசியாக கிடைத்த தகவல்கள் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றிருப்பதாக சொல்கின்றன. அதில் 253 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 லட்சத்து 28 ஆயிரம் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட லக்சம்பெர்க் நாட்டில் கூட சனிக்கிழமை வரை 670 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்க தகவல்.

தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை காவு வாங்கிக்கொண்டிருக்கிற இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 15 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிற மக்கள் தொகையை கொண்டுள்ள ரஷ்யாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கிறது.

எப்படி இங்கே மட்டும் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறதா?

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுமே, அதுவும் வெறும் 15 நாடுகளில் மட்டுமே கொரோனா வைரஸ் பரவி இருந்த நிலையில் ரஷ்ய பிரதமர் மிக்கேல் மிசுஸ்டின், ஜனவரி 30 ஆம் திகதி சீனாவுடனான தனது எல்லையை மூட உத்தரவிட்டார். அன்றைய தினமே அது மூடப்பட்டு விட்டது. இது மிக முக்கிய காரணம்.

தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களை ரஷ்யா அப்போதே உருவாக்கியது.

ரஷ்ய மக்கள் எத்தனையோ தலைமுறை பழமையானவர்கள். போர்கள், பஞ்சங்கள், அரசியல் நிலைத்தன்மை இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மரபணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொண்டிருக்கின்றனர்.

ரஷ்யாவில் எல்லாவிதமான வெளிநிகழ்ச்சிகளுக்கு ஆரம்பத்திலேயே தடை விதித்து விட்டார்கள். பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதித்தனர். பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன.

சோவியத் ரஷ்யாவை உருவாக்கிய விளாடிமிர் லெனின் நினைவிடம் அமைந்துள்ள மாஸ்கோ செஞ்சதுக்கம்தான் அந்த நாட்டிலேயே சுற்றுலாப்பயணிகளை பெருவாரியாக வாரிக்கொள்கிற இடம். அங்கு மக்கள் செல்வதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக சமூக அளவில் கொரோனா வைரஸ் பரவுவது அங்கு பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கென்று ஒரே ஒரு ஆய்வுக்கூடம் தான் இருக்கிறதாம்.

ரஷ்யாவில் அரசியலமைப்பு சாசனம் திருத்தங்கள் தொடர்பாக ஏப்ரல் 22 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பொது வாக்கெடுப்பு தள்ளிப்போடப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புதின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுபற்றி கூறுகையில், “நாட்டு மக்களின் உடல் நலம்தான் இப்போதைக்கு முக்கியம்” என்று குறிப்பிட்டார்.

மார்ச் 18 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரையாற்றிய ஜனாதிபதி புதின், “பொதுவாகவே நாங்கள் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். அதற்காக நன்றி கடவுளே. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

ரஷ்யாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி மீண்டு வந்துள்ள டேவிட் பெரோவ், “எனக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதை உறுதி செய்ய 3 முறை பரிசோதனை நடத்தினார்கள். எனது 3 வது பரிசோதனையில் தான் இது உறுதி செய்யப்பட்டது. அதுவும் என் ரத்தத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை. உமிழ்நீரில்தான் இருந்தது” என்று இன்ஸ்டாகிராமில் மார்ச் 5 இல் பதிவிட்டிருக்கிறார்.

ரஷ்யாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ரஷ்ய பிரதிநிதி டாக்டர் மெலிடா உஜ்னோவிக் கூறுகையில், “கொரோனா வைரசுக்கு எதிரான கட்டுப்பாடுகள் ஜனவரி மாதமே ரஷ்யாவில் தொடங்கி விட்டன. சோதனைகளை தாண்டி பரந்த அளவில் பலவிதமான நடவடிக்கைகளையும் ரஷ்யா மேற்கொண்டது. உலக சுகாதார நிறுவனத்தின் நெறிமுறைகள்படி இந்த நடவடிக்கைகள் எல்லாம் முன்கூட்டியே எடுக்கப்பட்டு விட்டன” என்கிறார்.

ரஷ்யாவில் மே 1 ஆம் திகதி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் தடை நீடிக்கிறது என்பது வெளிநாட்டில் இருந்து கூட இந்த நாட்டினருக்கு கொரோனா வைரஸ் வந்து தாக்குவதற்கான வாய்ப்பை தொடர்ந்து குறைக்கிறது என்பதற்கான தகவலாக அமைந்திருக்கிறது.

உற்ற தோழனான ரஷ்யாவின் பாதையில், இந்தியாவும் கொரோனா வைரஸ் என்னும் எதிரியை கட்டுக்குள் கொண்டு வந்து விடும் என்பது நாட்டு மக்களின் நம்பிக்கை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலி !! (உலக செய்தி)
Next post ஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்! (மருத்துவம்)