கொரோனா வைரஸால் திருமணத்தை ரத்து செய்த நடிகை !! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 55 Second

வவ்வால் பசங்க தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் உத்தரா உன்னி. பரத நாட்டிய கலைஞர். மலையாள நடிகை ஊர்மிளா உன்னியின் மகள். பல மலையாள படங்களில் நடித்து உள்ளார்.

உத்தரா உன்னி, நடிப்பு, நடனத்துடன் கொச்சியில் ஒரு நடனப்பள்ளியையும் நடத்தி வருகிறார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். மலையாள நடிகர் பிஜூமேனன், நடிகை சம்யுக்த வர்மா ஆகியோர் இவரது உறவினர்கள். உத்தராவுக்கும் நிதேஷ் நாயர் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் அடுத்த மாதம் கொச்சியில் நடைபெற இருந்தது.

இந்நிலையில் தனது திருமண நிகழ்ச்சியை தள்ளி வைத்துள்ளதாக உத்தரா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தள்ளி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘எங்கள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நீங்கள் ஏற்கனவே டிக்கெட் புக் செய்து வைத்திருப்பீங்கள். இருந்தாலும் இதை சொல்வதற்கு வருந்துகிறோம். குறிப்பிட்ட நாளில் எங்களின் தாலிகட்டு நிகழ்ச்சி கோவிலில் வைத்து நடைபெறும். அதுகுறித்த அறிவிப்பை தெரிவிக்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தனது திருமண நாளை தெரிவிக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புறக்கணிப்பின் வலி! (அவ்வப்போது கிளாமர்)
Next post வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்குவது எப்படி? (மகளிர் பக்கம்)