டீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 57 Second

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் உண்டு. பொது இடங்கள், அலுவலகங்கள் திருவிழாக்கள் போன்ற எல்லா இடங்களிலும், எல்லோரும் நமது அழகை ரசிக்க வேண்டும், நமது அழகு எல்லோர் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றெல்லாம் நாம் எண்ணுவது உண்மையே.

இளம் பெண்கள் தம்மை அழகுப்படுத்தி கொள்ள, பல அழகுசாதனப் பொருட்களை வாங்குவதில் அதிக பணத்தை செலவு செய்வது வாடிக்கையாகிவிட்டது. இருந்த போதிலும், இவற்றைப் பயன்படுத்துவதால், அவர்கள் தங்களை முழுமையாக அழகுப்படுத்தி கொள்கிறார்களா? என்பது சந்தேகத்திற்குரியது. ஆகவே, பெண்களுக்கான சில இயற்கையான ஆயுர்வேத அழகு குறிப்புகளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

அதிகளவு பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்:

உணவின் ஒரு பகுதியாக அதிகளவு பழங்களை சாப்பிடுங்கள். குறிப்பாக சர்க்கரை அல்லது உப்பு சேர்க்காமல் பழங்கள் சாப்பிட வேண்டும். அதிலும் கரும் பச்சை காய்கறிகள் உட்பட பல்வேறு வகை பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட்டு வந்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

கஸ்தூரி மஞ்சள்:

மஞ்சள், சிறிதளவு பச்சை பால், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி வந்தால், சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிற தடயங்கள் நீங்கிவிடும்.

தேவையான அளவு நீர் குடித்தல்:

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கபடுத்திக் கொள்ளுங்கள். தினமும் விடியற்காலையில் தண்ணீர் குடிப்பதால், சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேன் மற்றும் இஞ்சி பேஸ்ட் :

தேனையும், இஞ்சியையும் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன், முகத்தில் தடவ வேண்டும். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை தடுப்பதற்கு மிகவும் சிறந்தது.

ஆப்பிள்:

ஆப்பிளை மெல்லிய துண்டுகளாக வெட்டி, அவற்றை சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து, 10 நிமிடத்திற் குப் பின்னர் வெந்நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தின் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவும்.

ஆலிவ் ஆயில் மசாஜ்:

இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி, சருமத்தை இறுகச் செய்வதற்கு ஆலிவ் ஆயில் மசாஜ் மிகவும் பயனுள்ளதாகும். அதற்கு தினமும் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். ஆன்டிக்ளாக் முறையில் மசாஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தேன்:

தேன், எலுமிச்சை சாறு மற்றும் வெஜிடேபிள் ஆயில் ஆகியவற்றை சேர்த்து கலவை செய்யுங்கள். இந்த பேஸ்டை உலர்ந்த சருமத்தில் தடவி, 1015 நிமிடத்திற்குப் பின்னர் கழுவவும். இது உலர்ந்த சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள மிகவும் சிறந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவசியமா ஆண்மை பரிசோதனை? (அவ்வப்போது கிளாமர்)
Next post தலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள்!! (மகளிர் பக்கம்)