கோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 9 Second

கொட்டை நீக்கிய நெல்லிக்காய் – 4, ஆய்ந்து சுத்தப்படுத்திய வெந்தயக்கீரை – 1 கப். இரண்டையும் அரைத்து, 100 மி.லி. நல்லெண்ணெயில் சேர்த்து குறைந்த தணலில் கொதிக்க வைக்கவும். தெளிந்து வந்ததும் இறக்கி, வடிகட்டி வைத்துக் கொண்டு வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். வியர்வையால் கூந்தலில் ஏற்படுகிற பிசுபிசுப்பு, வாடை நீங்கி, தலை முதல் பாதம் வரை குளிர்ச்சியாக்கும் இந்த எண்ணெய்.

ஒரு கப் துளசி, நான்கு வேப்பந்தளிர், விதை நீக்கிய நெல்லிக்காய் 2 ஆகியவற்றை அரைத்து, ெகட்டி யான சாறு எடுத்துக் கொள்ளவும். தலையை நன்கு வாரிவிடவும். பிறகு அரைத்ததை அப்படியே தலையில் தடவிக் கொண்டு, 15 நிமிடங்கள் கழித்து அலசவும். இது தலைப்பகுதியில் வியர்வையைக் கட்டுப்படுத்தும். கூந்தலை மிருதுவாக்கும். கெட்ட வாடை இல்லாமல் வைக்கும். குளிர்ச்சியையும் கொடுக்கும்.

ஓர் இளநீரின் தண்ணீர் மற்றும் வழுக்கையை அரைத்து, அதில் 2 டீஸ்பூன் வெந்தயத் தூள் சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். இளநீர் சூட்டைத் தணித்து, கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும். வெந்தயத் தூள், சுற்றுப்புற மாசினால் கூந்தலின் மெருகு குறையாமல் காக்கும்.

2 பூந்திக்கொட்டையை விதை நீக்கி, 2 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 2 டீஸ்பூன் தயிருடன் முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் அரைத்து வடிகட்டி, ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு சேர்த்துக் கலக்கவும். இதை அப்படியே தலையில் தடவிக் கொண்டு அலசவும். தயிரில் உள்ள ஈஸ்ட் கண்டிஷனராக செயல்பட்டு பொடுகை நீக்கும். பூந்திக் கொட்டை ஷாம்பு போல நுரைத்து வந்து, கூந்தலை சுத்தப்படுத்தும்.

2 சின்ன வெங்காயத்துடன், 1 கப் செம்பருத்தி இலை சேர்த்து அரைத்து வடிகட்டிய சாற்றில் 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து தலையில் பேக் போல தடவி, சிறிது நேரம் ஊறி அலசவும். கோடையில் ஏற்படுகிற கூந்தல் பிசுபிசுப்பை நீக்கி, முடி உதிர்வுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். கூந்தல் பட்டு போல மென்மையாக மாறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெல்லமே…!! (மருத்துவம்)
Next post செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)