ஹேர் ஸ்பா !! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 4 Second

வெள்ளை முடியை மறைப்பதற்காக ஹேர் டை. முடியின் நிறத்தை மாற்ற ஹேர் கலரிங் போன்றவைகளை அடிக்கடி செய்வதால் நுனிமுடி இரண்டாக பிளவுபடுவதுடன் முடியின் வறண்ட தன்மை, பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்தல் போன்றவை ஏற்படும். இவற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான கூந்தல் சிகிச்சைதான் ‘ஹேர் ஸ்பா’. அதனை தோழி வாசகர்களுக்கு லதாவின் உதவியுடன் செய்து காட்டுகின்றார் ப்யூட்டி டச் & ஸ்பாவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான ஹேமலதா.‘‘முன்பெல்லாம் முடி என்றால் கருப்பு கலர் மட்டும்தான்.

ஆனால் இப்போதைய இளைஞர்கள், ஹைலைட்ஸ், ப்ரவுன், பர்கண்டி என முடியில் வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள். உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடை நிற ஷேடுகளை பயன்படுத்துகிறார்கள். ஹேர் டை என்பது கருப்பு நிறம் மட்டும்தான். ஹேர் கலரிங்கில் எல்லா வண்ணமும் உண்டு. முடிக்கு டை, ஹேர் கலரிங், ஹென்னா என மூன்று விதங்கள் உள்ளன. இளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஹேர் டை தான் பயன்படுத்துவார்கள்.

டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் பிபிடி சேர்த்திருப்பார்கள். முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும். நாம் பயன்படுத்தும் ஹேர் கலரின் வண்ணத்தை தரும் பிபிடியின் அளவு சற்று அதிகமானால் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. மேலும் தோல் அலர்ஜி, பக்க விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இவற்றில் ஏராளம் உண்டு. பெரும்பாலும் இந்த ரசாயனத் தயாரிப்புகளை மண்டை ஓட்டில் படாமல் முடியில் மட்டும் படுமாறு தடவ வேண்டும்.

அதற்கென உள்ள தொழில்முறை நிபுணர்களை அணுகினால் நல்லது. நமது ஒவ்வொரு முடியிலும் நிறைய க்யூட்டிக்கல்ஸ் உண்டு. அமோனியம் நமது முடியில் படும்போது மூடியிருக்கும் க்யூட்டிக்கல் அனைத்தும் திறக்கும். பெராக்சைடு முடியின் உள்ளிருக்கும் பிக்மென்டில் பட்டு செயற்கை வண்ணத்திற்கு அதனை மாற்றும். இதுதான் இவற்றின் செயல்பாடு. ஷாம்பூ பயன்படுத்தும்போது திறக்கும் க்யூட்டிக்கல்ஸ் கண்டிஷனரை பயன்படுத்தும்போது மூடிக்கொள்ளும். எனவே முடியில் தூசி, அழுக்கு போன்றவை உள் நுழைந்து முடி பாழாகாமல் இருக்க முடி சுத்தமானதும் கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது.

மூடிய அறைக்குள் ஹேர் டை, ஹேர் கலரிங் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் நெடி ஆஸ்துமா நோயாளிக்கு ஒவ்வாமையையும், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு பிரச்சனைகளையும் உண்டு பண்ணும். விலை மலிவான ஹேர் டைகளையும் வாங்கி பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக இயற்கை முறையிலான ஆர்கானிக் ஹேர் டைகளை பயன்படுத்தலாம் அல்லது ஹென்னா சிறந்தது. வீட்டிலேயே ஹென்னா செய்ய நினைப்பவர்கள், மருதாணியுடன் கத்தா பவுடர், ஆம்லா பவுடர், பீட்ரூட் சாறு, லெமன் சாறு, கறிவேப்பிலை, டீ டிக்காஷன், தயிர், முட்டையின் வெள்ளைக் கரு, சிறிது ஒயின் ஆகியவற்றைக் கலந்து தகர டப்பாவில் முதல் நாள் இரவு போட்டுவைத்து மறுநாள் தலையில் தடவலாம். முடி மென்மையாகவும் அழகாகவும் கருப்பாகவும் இருக்கும்.’’

தேவையானவை:

1. டேன்ட்ரஃப் கன்ட்ரோல் ஸ்க்ரப்,
2. சீரம்,
3. ஹேர் மாஸ்க் ஸ்பா க்ரீம்.

செய்முறை:

1. ஷாம்பால் தலை முடிகளை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

2. முடி ஈரப்பதத்தில் இருக்கும் நிலையில் முடியினை சிக்கின்றி நன்றாக சீவி தனித்தனி பகுதிகளாக பிரித்து படத்தில் உள்ளதுபோல் முடியினை க்ளிப் செய்து கொள்ளவும்.

3. டேன்ட்ரஃப் கன்ட்ரோல் ஸ்க்ரப்பை பிரித்து வைத்திருக்கும் முடிக் கற்றைகளுக்கு நடுவில் படத்தில் காட்டுவதுபோல் போட வேண்டும்.

3A. விரல்களை தலைமுடிகளுக்குள் பரவ விட்டு மசாஜ் செய்வதன் மூலம் டேன்ட்ரஃப் கன்ட்ரோல் ஸ்க்ரப் சொல்யூசன் தலை முழுவதும் பரவும்.

4.அதே போல் சீரம்மை முடிகளுக்கு நடுவில் படத்தில் காட்டுவதுபோல் போட வேண்டும்.

5.இறுதியாக சீரம் மற்றும் ஸ்பா க்ரீம் இரண்டையும் ஒரு கப்பில் கலந்து, அந்தக் கலவையினை முடிகளின் கீழ்ப் பகுதியில் இருந்து மேல் நோக்கி ப்ரஷ்ஷால் தடவ வேண்டும்.

5A.தொடர்ந்து ஒரு இருபது நிமிடம் தலையினை மசாஜ் செய்ய வேண்டும்.

6: முடியில் பொடுகு இல்லை என்றால் முடியினை இறுதியாக சிறிது நேரம் ஸ்டீரிம்மிங் செய்ய வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் முடியினை தண்ணீரால் சுத்தம் செய்து ஹேர் ட்ரை பண்ணிவிட்டால் பார்க்க அழகாக கூடுதல் ஆரோக்கியத்துடன் கூந்தல் இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வித்தியாசம் என்ற பெயரில் சும்மா புகுந்து விளையாடிய கார்கள் ! (வீடியோ)
Next post ஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்!! (மகளிர் பக்கம்)