டூர் போகலாம்!! (மகளிர் பக்கம்)
“இந்த துறைக்கு வந்து பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. தெரிந்தவர்களை மட்டுமே ஆரம்பத்தில் அழைத்து சென்று வந்தோம். அதன் பின் கடந்த எட்டு ஆண்டுகளாக இதனையே வேலையாக எடுத்து வெளியாட்களையும் குறைந்த தொகையில் கூட்டிட்டுப் போகிறோம். எப்போதும் சீரடி, காசி போன்ற புனித ஸ்தலங்களுக்கு ரூ.6,900க்கு அழைத்து செல்கிறோம். அங்கு தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்” என்கிறார் னிவாசா டூர் ஆப்ரேட்டர்ஸ் நிறுவனர் சேஷாத்ரி. அயனாவரம், தாம்பரம் என சென்னையில் இரண்டு கிளைகள் வைத்திருக்கும் ஸ்ரீ னிவாசா டூர் ஆப்ரேட்டர்ஸ் திருச்சி, மதுரை, வேலூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூரிலும் கிளைகள் வைத்துள்ளனர்.
‘‘ஏப்ரல்-மே கோடை விடுமுறையின் போது சுற்றுலா தளங்களான குலுமனாலி, டார்ஜிலிங், காஷ்மீர் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். காரணம், அந்த சமயத்தில் சென்னையில் வெப்பம் அதிகமாக இருக்கும். அப்போது குளு குளு இடங்களுக்கு சென்று வரும் போது மனதுக்கும் இதமளிக்கும். சுற்றுலாவிற்கு போகும் போது கைடு மற்றும் சமையல் செய்யும் நபர்களும் உடன் வருவார்கள். செல்லும் இடங்களில் தங்கும் இடம் மட்டும் இல்லாமல் சுற்றிப் பார்ப்பது மற்றும் சாப்பாடு எல்லாமே ஒரு பேக்கேஜாக தருகிறோம். அதிகமாக எங்களுக்கு வருவது சீனியர் சிட்டிசன்கள். அவர்கள் பாதுகாப்பாகவும், உடன் வருபவர்கள் எல்லாரும் சகஜமாக பழகுபவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் எல்லாரும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஜாலியா இருந்துட்டு வருவாங்க. சிலர் மருத்துவ பரிசோதனை எடுத்துக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.
அவர்களுக்கு ஏற்ற மாதிரி உணவு வழங்குகிறோம். கிட்டத்தட்ட ஒரு கூட்டுக் குடும்பம் போல் செயல்படுவோம். டூருக்கு வருபவர்கள் வீட்டை மறந்துதான் வருவாங்க. வயதானவர்கள் என்பதால் வீட்டில் இருக்கும் போது எப்போதும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். ஆனால் டூருக்கு வந்தவுடன் அதை எல்லாம் மறந்திடுவாங்க. இரண்டு இட்லி சாப்பிடுபவர்கள் இங்கு நான்கு இட்லி சாப்பிடுவார்கள். இங்கு அவர்களுக்கு இருக்கும் நோயை மறந்து ஒரு பத்து நாள் மகிழ்ச்சியாக இருப்பாங்க” என்கிறர் சேஷாத்ரி. இந்தியாவை தவிர வெளிநாடுகளிலும் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள். இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, துபாய், மலேசியா போன்ற நாடுகளுடன் இன்னும் பல நாடுகளுக்கு அழைத்து செல்கின்றனர்.
‘‘விமானம் மூலம் இலங்கைக்கு புனித யாத்திரை ஒன்பது நாட்களுக்கு நாங்கள் நிர்ணயித்திருக்கும் தொகை 49,800. இதில் பல இடங்களுக்கு அழைத்து செல்கிறோம். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் ேபாது எங்களின் கட்டணம் நியாயமானதாக இருப்பதால், பலர் எங்களை அணுகுகிறார்கள். வெளிநாடுகள் போகும் போது அங்கு தமிழ் பேசும் நபர்கள் தான் உடன் கைடாக செல்வார்கள். பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சைவம், அசைவம் உணவுகளை ஏற்பாடு செய்து தருகிறோம். குறைந்த கட்டணத்தில் செய்தாலும், நிறைவான ஓர் பயண அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்’’ என்றவர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள பல இடங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
‘‘ஒரு குடும்பமாகவோ, நண்பர்களோ ஒன்றிணைந்து பத்துக்கு மேற்பட்ட நபர்கள் அமையும் போது அவர்களை ஒரு குழுவாக இணைத்து டூருக்கு அழைத்து செல்வோம். பத்து பேர் வரும் போது ஒரு நபர் இலவசமாக வரலாம். வெளிநாடுகளுக்கு செல்லும் போது 16 பேருக்கு ஒருவர் இலவசம். குறைந்த பட்ஜெட்டில் சிறப்பாக செய்து கொடுப்பதால், அனைத்து வர்க்க மக்களும் எங்களிடம் வருகிறார்கள். இந்தியாவில் சுற்றுலாவுக்கென்று பல பகுதிகள் உள்ளன. அங்கெல்லாம் மக்கள் வந்து செல்வதற்காக அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கலாம். ரயில்வே துறையினை தனியாருக்கு கொடுப்பதாக சொல்கிறார்கள். டிக்கெட் விலைகள் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. அந்த விலை மாற்றத்தையும் எங்கள் வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களது பலம் வாடிக்கையாளர்கள்தான். அவர்களின் நம்பிக்கையாக நாங்கள் இருப்போம்’’ என்றார் சேஷாத்ரி.
Average Rating