இது சில்ட்ரன் டயட்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 37 Second

குழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்கக்கூடாது. காரணம் அதில் “கஃபின்’ உடலுக்கு ஏற்றது அல்ல. இதற்கு பதில் பால் கொடுக்கலாம். இதை விரும்பாத குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ், போன்விட்டா கலந்து கொடுக்கலாம்.

* காலை உணவு அவசியம். அதிகாலையிலேயே பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு முதலில் உணவு கொடுத்துவிட்டு, பின், பால் கொடுக்கலாம். இட்லி, பொங்கல், தோசையுடன் புதினா, மல்லி, கறிவேப்பிலை இதில் ஏதாவது ஒரு சட்னியை சேர்த்துக் கொடுக்கவும். சின்ன சின்ன இட்லி, கேரட் அல்லது காய்கறி தோசை என வெரைட்டியாக கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

* மூன்று வேளை உணவில் காய்கறி இருக்க வேண்டும். பள்ளிக்கு செல்லும் போது தண்ணீர் மட்டும் கொடுத்துவிடாமல், லெமன் ஜூஸ், புதினா ஜூஸ் போன்றவற்றை கொடுக்கலாம். பழங்களை ‘கட்’ செய்து கொடுத்து அனுப்பலாம்.

* இடைவெளி நேரத்தில் சாப்பிட, சூப் வகைகள், காய்கறி ஜூஸ், பழ ஜூஸ்களை கொடுக்கலாம். தினமும் ஒவ்வொரு “வெரைட்டி’ கொடுக்க வேண்டும்.

* கேரட், வெள்ளரி, பேரீச்சம் பழம் அனைத்தும் கலந்து கொடுத்து அனுப்பலாம். பள்ளி முடிந்து, மாலை வீடு திரும்பியவுடன் அவல், பொரி கடலை, அவித்தகொண்டைக்கடலை, பாசிப்பயறு, பட்டாணியை அளவோடு கொடுக்கலாம்.

* எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* மதிய உணவில் தினமும் காய்கறி சேர்க்க வேண்டும். வெஜிடபிள் ரைஸ், காலிபிளவர் ரைஸ், சோயாபீன்ஸ் ரைஸ், கீரை ரைஸ், கேரட், பீட்ரூட் ரைஸ், கேரட் பனீர் புலாவ், வெஜிடபிள் தால் ரைஸ், பட்டாணி புலாவ், சன்னா புலாவ் இதில் ஏதாவது ஒன்றை தினமும் கொடுக்கலாம்.

* சைடு டிஷ் ஆக கேரட், வெள்ளரி, பூசணிக் காய் தயிர் பச்சடி சேர்க்கலாம்.

* சாதம் விரும்பாத குழந்தைகளுக்கு கீரை சப்பாத்தி, உருளைகிழங்கு, கீரை மசால், கீரை சூப், கீரை கூட்டு, கேரட் முட்டைகோஸ், பட்டாணி பொரியல் கொடுக்கலாம். இதன்மூலம் தேவையான தாது, உயிர்ச்சத்துகள் கிடைக்கின்றன. உடல் வளர்ச்சி மற்றும் ரத்த ஓட்டம் சீராகிறது. உடல் உள் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கிறது.

* மாலை நேர உணவு பழங்கள், நிலக்கடலை, பொரி உருண்டை, பாசிப் பருப்பு, பொரி கடலை லட்டு, அவல், பிரட் கொடுக்கலாம். மதிய உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கு, மாலையில் கட்டாயம் உணவு கொடுக்க வேண்டும். எடை குறைந்த குழந்தைகளுக்கு, தினமும் நான்கு வேளை உணவு கொடுப்பது அவசியம்.

* மாலையில் அரைமணி நேரம் விளையாட வைக்க வேண்டும். இரவு, சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகே தூங்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு அசைவம் தரலாமா என்று சிலர் கேட்கக்கூடும். இரண்டு முட்டை நூறு கிராம் மட்டனுக்கு சமம் என்பதால், வாரம் இரு நாட்கள் முட்டை கொடுக்கலாம். சிக்கன், மட்டன், மீன்களை பொரிக் காமல் குழம்பு வைத்து, 50-75 கிராம் கொடுக்க வேண்டும். இதன்மூலம் புரதச்சத்து, கொழுப்புச் சத்து கிடைக்கிறது. அதிகமானால் கெடுதல்தான்.

* இனிப்பு வகைகள், சாக்லேட்ஸ், ஐஸ்கிரீம்ஸ், பேக்கரி உணவுகள், கூல்டிரிங்ஸ், சிப்ஸ், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் மற்றும் ஓட்டல் உணவுகளில் கட்டுப்பாடு அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தை வளர்ப்பு! கவனக் குறிப்பு!!! (மருத்துவம்)
Next post தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல் !! (கட்டுரை)