வட கொரியாவிற்கு அமெரிக்கா, ஐ.நா. எச்சரிக்கை!

Read Time:1 Minute, 15 Second

North.Korea.Flag.1.jpgஅணு ஆயுதச் சோதனை நடத்தப் போவதாக வட கொரியா அறிவித்திருப்பதற்கு உரிய வகையில் பதிலளிப்போம் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது! வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ஷான் மெக்கார்மாக், வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனை அறிவிப்பு, ஆசியாவின் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் ஓர் அச்சுறுத்தல் என்று கூறினார்.

வட கொரியாவின் அறிவிப்பையடுத்து, ஐ.நா.வின் பாதுகாப்பு பேரவை நேற்று இரவு அவசரமாகக் கூடி விவாதித்தது. அணு ஆயுத சோதனை நடத்தப்படும் என்று வட கொரியா உறுதியாக அறிவித்துள்ளதால் அதனைத் தடுக்கக்கூடிய அரசியல் ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புப் பேரவையை அமெரிக்க தூதர் ஜான் போல்டன் கேட்டுக் கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை ஜெனீவாவில்! இம்மாதம் 28 முதல் 30ம் திகதி வரை!! -அரசாங்கம் அறிவிப்பு-
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்