பைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 10 Second

உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்குகிறது மாரடைப்பு நோய். ரத்தக்குழாய் அடைப்பு காரணமாக இக்கொடிய நோய் ஏற்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் ஆளை அடியோடு சாய்த்துவிடுகிறது. அதிரடியாக செயல்பட்டு பைபாஸ் சர்ஜரி செய்தால் இந்நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடிகிறது. முன்பெல்லாம் வயதானவர்களையே அதிகமாக காவு வாங்கிய இதய நோய் இப்போது வயது வித்தியாசமின்றி இளைஞர்களையும் பலி வாங்குகிறது.

இதய ரத்தக்குழாய் அடைப்பை எளிய மருந்து மூலம் குணப்படுத்திவிட முடியும். அதற்கு இதோ சில டிப்ஸ்… எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய நான்கு பொருள்களும் சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருள். இந்த பொருள் அனைத்துக்குமே ரத்தக்குழாய்களை சுத்தப்படுத்தும் பண்பு உள்ளது. உணவில் இவற்றை அதிகம் எடுத்துக்கொண்டால் ரத்தக்குழாய் அடைப்பு விலகிவிடும். ஒரு மனிதனுக்கு இதயம் அவனுடைய உள்ளங்கை அளவுதான் இருக்கும் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலில் உணவுக்குழாய் முதல் மலக்குழாய் வரை எண்ணற்ற குழாய்கள் உள்ளன. இதில் முக்கியமானது 13 குழாய்கள். இதில் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்க்கு ‘’ரஸவஷா ஸ்ரோதஸ்’’ என்று பெயர். இந்த ரத்த குழாய்கள் சீராக இல்லை என்றால் கட்டி, குழாய் அடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளால் தொந்தரவு ஏற்படும்.

புளிப்பு சுவை இதய ஆரோக்கியத்துக்கு நல்லது; எலுமிச்சை, ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவை அதிக புளிப்புச்சுவை உடைய உணவுகள். இவற்றில் உள்ள சத்துகள் ரத்தக்குழாய்களை சீராக இயங்க வைக்கும். ‘’புளிப்புக்காடி’’ என்னும் வினிகர் எளிதாக உட்கிரகிக்கக்கூடியது. கட்டியை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு. ரத்தக்குழாயில் படிந்திருக்கும் கொழுப்பை இது கரைத்து விடும். இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை காரச்சுவை கொண்டது. பூண்டு சாற்றுக்கு ஆயுர்வேதத்தில் `கடுரசம்’’ என்று பெயர். பூண்டு, கொழுப்பை குறைக்கும் என்பது பலரும் அறிந்ததுதான். இஞ்சி, கல்லீரல் செயல்பாட்டுக்கும், உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் பெரிதும் துணை புரிகிறது. ரத்த நாளங்களில் படியக்கூடிய கொழுப்பை குறைக்கும் தன்மை இஞ்சிக்கும் உண்டு.

இவற்றை எடுத்துக்கொண்டால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.உடல் எடை குறைக்க, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, ரத்த கொழுப்பு குறைக்க என பலவழிகளில் உடல் ஆரோக்கியத்துக்கும் இந்த உணவுப்பொருள் உதவுகிறது. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுக்க முடியும். மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகளுக்கு காரணமான உடல் பருமன் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)
Next post நௌகாசனம்!! (மகளிர் பக்கம்)