ஜெனரல் மோட்டார் டயட்.. கேள்விப்பட்டிருக்கீங்களா? (மருத்துவம்)
ஜெனரல் மோட்டார் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களில் பலருக்கு ஒபிஸிட்டி இருப்பதைக் கண்டு இந்த டயட்டை உருவாக்கியது. அதனால் இது ஜி.எம் டயட். தடாலடியாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஜி.எம்.டயட் பெஸ்ட் சாய்ஸ். திருமணம் ஆகப்போகும் இளம் பெண்களும் ஆண்களும் இதைப் பயன்படுத்தி உடனடி பலன் பெறலாம். இந்த டயட்டை ஒரு கோர்ஸில் ஏழு நாட்கள் பின்பற்ற வேண்டும். மிகவும் கடுமையான டயட் விதிகள் கொண்ட உணவுமுறை என்பதால் எல்லோருக்கும் ஏற்றது அல்ல.
மேலும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாரத்துக்கு இந்த டயட்டை மேற்கொள்வது நல்லது. அதற்கும் குறைவான கால இடைவெளியில் இந்த டயட்டைப் பின்பற்றுவது ஆரோக்கியதுக்கு நல்லது அல்ல. இந்த டயட் மூலமாக அதிகபட்சமாக 10 கிலோ வரை எடை குறையும். தோற்றத்தை அதிரடியாக ஸ்லிம் ஆக்கிக்கொள்ள இயலும். சருமம் பொலிவு பெறும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள், கொழுப்புகள் நீங்கும். சற்று கடினமான டயட் என்பதால் இதைப் பின்பற்றும் முன்பு உங்கள் மருத்துவரின் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுவிடுங்கள். இதற்கான டயட் சார்ட் இதோ…
நாள் ஒன்று
பழங்கள் மட்டுமே முதல் நாள் டயட். இதைத் தவிர காய்கறிகள், அரிசி, கோதுமை, முட்டை அசைவம் அனைத்துக்கும் நோ. பழங்களிலும் வாழை, லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சையைச் சேர்க்கக் கூடாது.
நாள் இரண்டு
வேகவைத்த ஓர் உருளைக்கிழங்கை ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் காலை உணவாகச் சாப்பிடலாம். காய்கறிகளைப் பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ மதியமும் இரவும் சாப்பிடலாம். காய்கறி சாலட்டும் எடுத்துக்கொள்ளலாம். பழங்கள் வேண்டாம். அரிசிக்கும் கோதுமைக்கும் தடா.
நாள் மூன்று
உருளைக் கிழங்கைத் தவிர மற்ற காய்கறிகளையும், கீரைகளையும், வாழைப் பழம் தவிர மற்ற பழங்களையும் சாப்பிடலாம். இன்றும் அரிசி, கோதுமைக்கு நோ.
நாள் நான்கு
ஒரு டம்ளர் பால் (ஸ்கிம்டு மில்க்) மற்றும் இரண்டு வாழைப்பழங்களை மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். இத்துடன், தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து, சூப்செய்து குடிக்கலாம். அரிசி, கோதுமைக்கு நோ.
நாள் ஐந்து
முளைகட்டிய பயறை வேகவைத்துச் சாப்பிடலாம். சிவப்பு அரிசி சாதத்துடன் தயிரும் தக்காளியும் சேர்த்துச் சாப்பிடலாம். வேகவைத்த சிக்கன் அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸையும் சேர்த்துக்கொள்ளலாம். பவுல் சூப்பும் எடுத்துக்கொள்ளலாம்.
நாள் ஆறு
ஐந்தாம் நாள் டயட்டுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடலாம். ஆனால், தக்காளி மட்டும் சேர்க்கக் கூடாது.
நாள் ஏழு
அரிசி சாதத்துடன் காய்கறிகள், கீரைகள், பழங்கள் என அனைத்தையும் மூன்று வேளையும் சாப்பிடலாம். அரிசியை முடிந்தவரை குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த ஏழு நாளிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 – 12 டம்ளர் குடிநீர் அருந்த வேண்டியது அவசியம். ஏழாம் நாளைத் தவிர மற்ற நாட்களில் ஜூஸ், டீ, காபி குடிக்கக் கூடாது. ஜி.எம் டயட்டில் உடற்பயிற்சியும் ஓர் அங்கம். எனவே தினசரி அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முடியாவிடில் தினசரி 10,000 அடிகள் நடக்க வேண்டும்.
Average Rating