துருக்கி விமானம் கடத்தல் -இத்தாலியில் சரண், இந்திய அழகியுடன் 113 பேரும் மீட்பு
துருக்கி நாட்டுக்கு போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் வருவதை எதிர்த்து துருக்கி நாட்டை 2 இளைஞர்கள் விமானத்தைக் கடத்தினர். இருப்பினும் அந்த விமானத்தை இத்தாலி நாட்டு போர் விமானங்கள் சுற்றி வளைத்து இத்தாலியில் தரையிறக்கின. அல்பேனிய தலைநகர் திரானாவிலிருந்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு துருக்கி பயணிகள் விமானம் கிளம்பியது. இதில் 107 பேர் பயணம் செய்தனர். இவர்களில் 5 பேர் துருக்கியர்கள், மற்றவர்கள் மலேசியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். அந்த விமானத்தில் 107 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர். இதே விமானத்தில் குலோபர் அழகி போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்ற இந்திய அழகி கனிஷ்கா மற்றும் சில நாடுகளை சேர்ந்த அழகிகளும் அல்பேனிய நாட்டு எம்.பி. சாதிரி சுபாசியும் இருந்தனர்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த மாடலான நாடாஷா சூரியும் இருந்தார். இவர் போலந்து தலைநகர் வார்ஸாவில் நடந்த மிஸ் வோர்ல்ட் போட்டியில் பங்கேற்றுவிட்டு (தோற்றுவிட்டு) அங்கிருந்து துருக்கி சென்று கொண்டிருந்தார்.
விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் ஹகன் என்ற வாலிபர் உள்ளிட்ட 2 துருக்கிய பயணிகள் எழுந்து விமான பைலட்டை மிரட்டி தாங்கள் சொல்லும் இடத்திற்கு விமானத்தை செலுத்துமாறு உத்தரவிட்டனர். மேலும் விமானம் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பயணிகளிடம் அறிவித்தனர். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது விமானம் இத்தாலி வான்வெளியில் பறந்து கொண்டிருந்தது. இதையடுத்து விமானம் கடத்தப்பட்டது குறித்து இத்தாலி நாட்டுக்குத் தகவல் கொடுத்தார் விமானி.
இதையடுத்து இரண்டு எப்.16 ரக போர் விமானங்களை இத்தாலி அனுப்பியது. அந்த இரு போர் விமானங்களும், துருக்கி விமானத்தை சுற்றி வளைத்து விமானத்தை தரையிறக்க உத்தரவிட்டன.
அதே நேரத்தில் விமானத்தைக் கடத்தியதாக அறிவித்த 2 பேரிடமும், இத்தாலி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இஸ்லாமுக்கு எதிராக கருத்து தெரிவித்த போப்பாண்டவர் துருக்கிக்கு வரக்கூடாது. இதை வலியுறுத்தவே விமானத்தை கடத்தியுள்ளதாக இரு துருக்கியர்களும் தெரிவித்தனர்.
இது குறித்து ரோம் அதிகாரிகளுடன் தான் நீங்கள் பேச வேண்டும் என போலீசார் கூறியதையடுத்து விமானக் கடத்தலைக் கைவிடுவதாக இருவரும் அறிவித்தனர். இதையடுத்து இத்தாலி நகரின் பிரிந்திசி என்ற நகரில் விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறக்கப்பட்டதும் 2 துருக்கியர்களும் மற்ற பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். பின்னர் இத்தாலி போலீஸாரிடம் சரணடைந்தனர். விமானக் கடத்தில் எந்த அசம்பாவித¬ம் நடைபெறவில்லை. பயணிகளும், விமான ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சரண் அடைந்த கடத்தல் காரர்களில் ஒருவன் பெயர் ஹகான் எகினி (வயது28). துருக்கியில் பிறந்த இவன் கடந்த மே மாதம் அல்பேனியாவுக்கு சென்று அங்கேயே தங்கி விட்டான். ஏற்கனவே இவன் மோசடி மற்றும் ஜேப்படி வழக்கில் சம்பந்தப்பட்டவன். போப் ஆண்டவருக்கு அவன் ஒரு கடிதமும் எழுதி இருந்தான். அதில் நான் கிறிஸ்தவனாக மாறி விட்டேன். இஸ்லாமிய ராணுவத்தில் பணியாற்ற நான் விரும்பவில்லை. எனக்கு உதவி செய்யுங்கள் என்றும் கூறியிருந்தான்.