தேகம் பளபளப்பிற்கு சீரகம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 12 Second

* சீரகம், சுக்கு, மிளகு, சித்தரத்தை அனைத்தையும் சேர்த்து தூளாக்கி தினமும் இரண்டு வேளை இரண்டு சிட்டிகை அளவு சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுபொருமல் வற்றி நலம் பயக்கும்.

* சீரகத்துடன் மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எலுமிச்சை சாற்றில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் வயிற்று ேபாக்கு குணமாகும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய அரைத்து பசும்பாலில் கலந்து குடித்துவர நல்ல பலன் கிடைக்கும்.

* சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாற்றில் சேர்த்து பருகி வர கல்லீரல் பிரச்னை நீங்கும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* சீரகமும், திப்பிலியும் சேர்த்து பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப்பழத்துடன் சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

* தனியாவுடன் சிறிது சீரகம் சேர்த்து மென்று தின்றால் அதிகம் மது உண்ட போதை தணியும்.

* சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரோடு குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

* அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

* நெஞ்சு எரிச்சலுக்கு சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து கொட்டை பாக்களவு சாப்பிட வேண்டும்.

* சீரகத்தை எலுமிச்சை சாற்றில் ஊறவைத்து உலர்த்தி தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்துவர மார்புவலி நீங்கும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து பருகினால் வாயுத்தொல்லை நீங்கும்.

* சீரகம், இஞ்சி, எலுமிச்சை சாற்றில் கலந்து ஒருநாள் ஊற வைத்துக்கொள்ளவும். இதை தினமும் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாக குறையும்.

* சுக்கு, மிளகு, சீரகம், திப்பிலி ஆகியவற்றை பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உறுப்புகளும் சீராக இயங்கச் செய்யும்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

* சீரகத்தை தூள் செய்து லேகியமாக கலந்து மெலிந்துபோன உடல் உள்ளவர்களுக்கு கொடுத்துவர நல்ல பலன் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post விதிகளை மீறும் பாக்கெட் உணவுகள்!! (மருத்துவம்)